Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

2024 - பொதுத் தேர்தல்: 60-65% வாக்குப்பதிவு!

T

The Leader Desk

நவம்பர் 14, 2024 • 11:58 AM

2024 - பொதுத் தேர்தல்: 60-65% வாக்குப்பதிவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வாக்களிப்பை அறிவிப்பதில் ஆர்வமின்மை காணப்படுவதாக PAFRAL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
  • இந்த ஆண்டு 738,050 வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்குகளை எண்ணுவதற்காக நாடளாவிய ரீதியில் 2,034 நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
  • முதல் உத்தியோகபூர்வ வாக்களிப்பு முடிவுகள் இரவு 10 மணிக்குள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

கூற்றுப்படி, பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளின் சதவீதம் 60-65 சத வீதம் ஆகுமென தெரிவிக்கப்படுகிறது

வாக்காளர்கள் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்துள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க பிபிசி சிங்கள சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பை அறிவிப்பதில் ஆர்வமின்மை காணப்படுவதாக PAFRAL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

2024 பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (14) மாலை 4 மணியுடன் முடிவடைந்தது. 

வாக்குப்பதிவு மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

பொதுத் தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று நள்ளிரவுக்கு முன்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தபால் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

இதேவேளை, தபால் வாக்குகளை எண்ணும் பணி ஏற்கனவே எண்ணும் நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு 738,050 வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 
 
வாக்குகளை எண்ணுவதற்காக நாடளாவிய ரீதியில் 2,034 நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வாக்குகளை எண்ணுவதற்கு சுமார் 80,000 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல் உத்தியோகபூர்வ வாக்களிப்பு முடிவுகள் இரவு 10 மணிக்குள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...