Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

புதிய சபாநாயகராக டாக்டர் ஜகத் விக்ரமரத்ன!

T

The Leader Desk

டிசம்பர் 16, 2024 • 5:31 AM

புதிய சபாநாயகராக டாக்டர் ஜகத் விக்ரமரத்ன!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிய.
  • தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட விருப்புப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்ற விக்கிரமரத்ன 51,391 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
  • மருத்துவ நிருவாகியாகவும் பணியாற்றிய விக்ரமரத்ன, பொலன்னறுவை கல் அமுனா மகா வித்தியாலயம் மற்றும் கண்டி தர்மராஜா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.
  • முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல ராஜினாமா செய்ததையடுத்து, சபாநாயகர் பதவி காலியாக உள்ளது. புதிய சபாநாயகர் நியமனம் நாளை (17) நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிய. வருகிறது.

ஜகத் விக்ரமரத்ன கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவானார். தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட விருப்புப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்ற விக்கிரமரத்ன 51,391 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மருத்துவ நிருவாகியாகவும் பணியாற்றிய விக்ரமரத்ன, பொலன்னறுவை கல் அமுனா மகா வித்தியாலயம் மற்றும் கண்டி தர்மராஜா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல ராஜினாமா செய்ததையடுத்து, சபாநாயகர் பதவி காலியாக உள்ளது.  புதிய சபாநாயகர் நியமனம் நாளை (17) நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இலங்கையின் 23வது சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி எம்.பி ஒருவரின் பெயரை முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...