Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

கொழும்பு, மாளிகாகந்த துப்பாக்கிச் சூடு; காயமடைந்த பெண் இவர்தான்!

T

The Leader Desk

டிசம்பர் 15, 2024 • 5:40 AM

கொழும்பு, மாளிகாகந்த துப்பாக்கிச் சூடு; காயமடைந்த பெண் இவர்தான்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்று (14) வந்த தம்பதியினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் 40 வயதுடைய பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • நேற்று மாலை 3 மணியளவில் மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
  • துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கொழும்பு 13 பகுதியில் வசிக்கும் நிலுகா தில்ஹானி என்ற 40 வயதுடைய பெண்ணாவார்.
எழுத்து அளவு:

நேற்று (14) வந்த தம்பதியினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் 40 வயதுடைய பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் இலக்கு அந்த பெண்ணுடன் இருந்த ஆணாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
 
நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள  வழக்கு ஒன்று தொடர்பில் விசாரணைக்கு வந்தபோதே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
 
நேற்று மாலை 3 மணியளவில் மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்துக்கு அருகில்  இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
 
இந்த துப்பாக்கிச் சூடு அருகில் உள்ள சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
 
மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த தம்பதியரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்த இருவர மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கொழும்பு 13 பகுதியில் வசிக்கும் நிலுகா தில்ஹானி என்ற 40  வயதுடைய பெண்ணாவார்.
 
பலத்த காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கொழும்பு, மாளிகாகந்த துப்பாக்கிச் சூடு; காயமடைந்த பெண் இவர்தான்! | Tamil Leader | We Lead the Nation