Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

மாவடிப்பள்ளி அனர்த்தத்தில் மரணமடைந்த மதரஸா மாணவர்களின் குடும்பங்களுக்கு முதல்கட்ட நஷ்டஈடு வழங்கி வைப்பு!

T

The Leader Desk

டிசம்பர் 12, 2024 • 6:31 PM

மாவடிப்பள்ளி அனர்த்தத்தில் மரணமடைந்த மதரஸா மாணவர்களின் குடும்பங்களுக்கு  முதல்கட்ட  நஷ்டஈடு வழங்கி வைப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான ஏ ஆதம்பாவா கலந்து கொண்டு கசோலைகளை வழங்கி வைத்தார்.
  • அத்துடன் இந்த நஷ்டஈட்டுத் தொகையை ஒரு மில்லியனாக அதிகரித்து வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
  • மேலும் இந்நிகழ்வில் கெளரவ அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம கலந்து கொண்டார்.
எழுத்து அளவு:

மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில்  உயிரிழந்த சம்மாந்துறையைச் சேர்ந்த ஆறு மதரஸா மாணவர்கள் மற்றும் பொதுமகன் ஒருவருமாக எழு குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் 250,000 ரூபா நஷ்டஈடாக  வழங்கி வைக்கும் நிகழ்வும், அவர்களுக்காக துஆ பிராத்தனை செய்யும் நிகழ்வும்,   சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான ஏ ஆதம்பாவா கலந்து கொண்டு கசோலைகளை வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் கெளரவ அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம கலந்து கொண்டார்.

மேலும் இந் நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஏ.எல் மஹ்ரூப்,சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்(LLB), கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா,சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவரும்,முன்னாள் அரசாஙக அதிபருமான ஐ.எம் ஹனீபா,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமீல்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுஸைன் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவின் பிரதிநிதியான எம்.இம்தியாஸ், சம்மாந்துறை உலமா சபைத் தலைவர் சம்மாந்துறை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எம் நெளபர், அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம் அஸாருத்தீன்  உட்பட கிராம சேவகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் இந்த நஷ்டஈட்டுத் தொகையை ஒரு மில்லியனாக அதிகரித்து வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மெளலவி அல்ஹாபிழ் ஏ.பெளஸ்தீனினால் (தப்லீகி) மரணித்தவர்களுக்காக துஆப் பிரார்த்தனை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...