Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் மற்றொரு எம்பியின் போலியான கல்வித் தகைமை! (வீடியோ)

T

The Leader Desk

டிசம்பர் 11, 2024 • 5:00 AM

தேசிய மக்கள் சக்தியின் மற்றொரு எம்பியின் போலியான கல்வித் தகைமை! (வீடியோ)

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமது பல்கலைக்கழகத்தில் ஒருபோதும் மாணவராக இருந்ததில்லை என்பதை ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.
  • முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரள நேற்று (10) விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • எனவே, இலங்கை சபாநாயகரின் கலாநிதி பட்டத்தின் குற்றச்சாட்டுகள் நாட்டை அவமதிக்கும் செயலாகும் என தெரிவித்த முன்னாள் அமைச்சர், சபாநாயகர் உடனடியாக தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
எழுத்து அளவு:

தமது பல்கலைக்கழகத்தில் ஒருபோதும் மாணவராக இருந்ததில்லை என்பதை ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.

போலியான கலாநிதி பட்டத்தை காட்டுவது பாராளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது.

முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரள நேற்று (10) விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்த ஊடகவியலாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இலங்கை பாராளுமன்றம் ஆசியாவின் முதலாவது பாராளுமன்றம் அங்கு என்ன நடக்கிறது என்பதை முழு உலகமும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

எனவே, இலங்கை சபாநாயகரின் கலாநிதி பட்டத்தின் குற்றச்சாட்டுகள் நாட்டை அவமதிக்கும் செயலாகும் என தெரிவித்த முன்னாள் அமைச்சர், சபாநாயகர் உடனடியாக தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

WhatsApp Image 2024 12 10 at 2.31.41 PM 1

கம்பஹா மாவட்டத் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியினால் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட தேர்தல் துண்டுப் பிரசுரங்களில் தற்போதைய சபாநாயகர் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப் படிப்பை கற்றவர் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தலதா அத்துகோரள தெரிவித்தார்.

இதன்படி கம்பஹா மாவட்ட மக்களும் முழு நாட்டினதும் வாக்காளர்களும் ஏமாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“இந்நிலையில், மற்றைய தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்களின் கல்வித் தகுதி குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. "இதே கட்சியின் மற்றொரு எம்பி சமர்ப்பித்த போலி கல்வித் தகுதிகள் பற்றிய தகவல்களை நாங்கள் பெற்றுள்ளோம்," என்று அவர் மேலும் கூறினார்.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...