Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

மனு கொடுத்து நீதி கோரும் அதாவுல்லாஹ்!

T

The Leader Desk

டிசம்பர் 10, 2024 • 2:17 PM

மனு கொடுத்து நீதி கோரும் அதாவுல்லாஹ்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும் என கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸிடம் மனு கையளிக்கப்பட்டுள்ளது.
  • அதாஉல்லாஹ் கைளித்ததாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் உறுதிப்படுத்தினார்.
  • ஆனால் புதிய ஜனநாயக முன்னணி 88 வாக்குகளால் தோற்றதாக அறிவிக்கப்பட்டது.
எழுத்து அளவு:

தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும் என கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸிடம்  மனு கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்டு தோல்வியடைந்த  தேசிய காங்கிரஸின் தலைவரும்  முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் சட்டத்தரணி  எம்.எம்.எம். முஅஸ்ஸம்  சகிதம்  இன்று மனு ஒன்றினை கைளித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய அலுவலகத்துக்குச் சென்று இன்று. (10)  குறித்த மனுவை கையளித்துள்ளதுடன் குறித்த மனுவில் திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளை மீள எண்ணப்பட வேண்டும் என கோரி பல தரப்பினரிடம்  தேசிய காங்கிரஸ் தலைவராக சென்று கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு உரிய பதில்கள் கிடைக்கவில்லை என  குறிப்பிட்டு தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதே வேளை   நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அடங்கிய மனுவொன்றை தனக்கு தேசிய காங்கிரஸின் தலைவரும்  முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்   கைளித்ததாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் உறுதிப்படுத்தினார்.

மனுவை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்

.நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் வாக்காளர்களின் உரிமைகள் திட்டமிடப்பட்ட வகையில் மறுக்கப்பட்டுள்ளன.

மேலும்  நாம் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட முடிவுகளை ஏற்று கொள்ளவில்லை. ஆனால் புதிய ஜனநாயக முன்னணி 88 வாக்குகளால் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்று  கொழும்பில் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு நாம் செய்துள்ளோம்.   நீதிக்கான எமது போராட்டம் தொடரும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மனு கொடுத்து நீதி கோரும் அதாவுல்லாஹ்! | Tamil Leader | We Lead the Nation