Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

போரின்போது சிந்திய இரத்தம் இன்னமும் காயாத காலத்தை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்- உலகத் தமிழர் பேரவை பேச்சாளர் சுரேன் சுரேந்திரன்.

T

The Leader Desk

டிசம்பர் 10, 2024 • 6:11 AM

போரின்போது சிந்திய இரத்தம் இன்னமும் காயாத  காலத்தை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்- உலகத் தமிழர் பேரவை பேச்சாளர் சுரேன் சுரேந்திரன்.

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழில் வணக்கத்துடன் ஆரம்பித்து சிஙகளத்தில் தொடர்ந்த சுரேன் சுரேந்தினின் உரை வருமாறு "என் பெயர் சுரேன் சுரேந்திரன்.
  • சமத்துவத்தின் சாரத்தை அழகாக எடுத்துரைக்கும் புத்தபெருமானின் போதனைகளில் ஒன்றான வாசல சூத்திரம் இந்த நேரத்தில் எனக்கு நினைவுக்கு வருகிறது.
  • பெப்ரவரி 2010இல் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உலகத் தமிழ் பேரவையின் தொடக்க நிகழ்வுக்கு தேரரை அழைத்தபோதுதான் தேரருடனான எனது முதல் உரையாடல் ஆரம்பமானது.
எழுத்து அளவு:

தமிழில் வணக்கத்துடன் ஆரம்பித்து சிஙகளத்தில் தொடர்ந்த சுரேன் சுரேந்தினின் உரை வருமாறு

"என் பெயர் சுரேன் சுரேந்திரன். எமது அன்புக்குரிய தேரரை மாநாயக்கராக உத்தியோகபூர்வமாக நியமிக்கும் இந்த முக்கியமான நிகழ்வில் பங்குபற்றுவதற்காக நான் லண்டனில் இருந்து வருகை தந்துள்ளேன். 
 
பௌத்தமத அத்தியாயத்தில் தேரரை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியதை நாங்கள் கொண்டாடும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.
எனது சிங்களப் பேச்சுத் திறன் குறைவு என்று தெரிந்திருந்தும் இன்று உரை நிகழ்த்துவதற்கு அவர் எனக்கு விடுத்த அழைப்பையிட்டு நான் பணிவடைகிறேன். எனக்கு தெரிந்தபடி, இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததொரு சிங்கள பௌத்த நிகழ்வில் உரையாற்றுவதற்கு இதுவரையில் வேறு எந்தத் தமிழருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று நான் நம்புகிறேன். தேரரின் இந்தச் செயலின் மூலம் சமத்துவத்தை எடுத்துக் காண்பித்துள்ளார். புத்தபெருமான் போதித்த உள்ளடக்கத்தின் உண்மையான உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
 
சமத்துவத்தின் சாரத்தை அழகாக எடுத்துரைக்கும் புத்தபெருமானின் போதனைகளில் ஒன்றான வாசல சூத்திரம் இந்த நேரத்தில் எனக்கு நினைவுக்கு வருகிறது. அதிலிருந்து ஒரு சிறிய பகுதியைப் பகிர்ந்து கொள்கிறேன்:
 
'ந ஜஜ்ஜா வஸலோ ஹோதி, 
ந ஜஜ்ஜா ஹோதி பிராமணோ.
கம்மனா வாசலோ ஹோதி, 
கம்மனா ஹோதி பிராமணோ.'
 
IMG 20241210 WA0086
 
இதன் கருத்து; புத்தர் கற்பித்தது போல், உண்மையான மதிப்பு, ஒருவரின் செயல்களால் தீர்மானிக்கப்படுகிறது, சமூக அல்லது பரம்பரை நிலையால் அல்ல.
 
பெப்ரவரி 2010இல் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உலகத் தமிழ் பேரவையின் தொடக்க நிகழ்வுக்கு தேரரை அழைத்தபோதுதான் தேரருடனான எனது முதல் உரையாடல் ஆரம்பமானது.
 
போர் நிறைவு பெற்று குறிய காலத்திலேயே எங்கள் நிகழ்வுக்கு ஒரு சிங்கள பௌத்த தேரரை லண்டனுக்கு அழைத்தபோது, அது எங்களின் துணிச்சலான செயல் என்று நாங்கள் நம்பினோம். 
 
இலங்கையில் பலர் வெள்ளை வேன்கள் மூலமாக காணாமலாக்கப்பட்டிருந்த காலத்தையும், போரின்போது சிந்திய இரத்தம் இன்னமும் காயாத  காலத்தை நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
 
அப்படியான ஒரு பயங்கரமான காலத்தில் தேரரின் லண்டனுக்கு பயணிக்கும் தீர்மானமும், எங்களோடு சேர்ந்து சகோதர்த்துவத்தைப் பேணி இருந்தமையும், பிரித்தானிய பாராளுமன்றத்தில் சமத்துவம் பற்றி எமது சமூகத்தின் முன்பாக உரையாற்றியமையும் அவருடைய உண்மையான தைரியத்தை வெளிப்படுத்தியது.
 
IMG 20241210 WA0087
 
சகவாழ்வு மற்றும் சமத்துவத்தை ஊக்குவிக்கும் பன்முக நம்பிக்கை அமைப்பான தர்மசக்தி அமைப்புடன் எங்கள் அன்பான வணக்கத்துக்குரிய தேரரின் பணி மற்றும் இமாலய பிரகடனத்தை உருவாக்குவதில் அவர் ஆற்றிய முக்கிய பங்கு, வார்த்தைகளில் மட்டுமல்ல, நடைமுறையிலும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
 
"இப்படியான ஒரு பௌத்த சமய முக்கியத்தும் வாய்ந்த நிகழ்வில் சரித்திரம் படைக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை எனக்கு அளித்ததற்கு எனதும் எனது சமூகத்தினதும் நன்றியையும் வாழ்த்துக்களையும் மீண்டும் கூறி என் உரையை முடித்துக் கொள்கிறேன்."
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

போரின்போது சிந்திய இரத்தம் இன்னமும் காயாத காலத்தை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்- உலகத் தமிழர் பேரவை பேச்சாளர் சுரேன் சுரேந்திரன். | Tamil Leader | We Lead the Nation