Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது சிரியா: ஜனாதிபதி தப்பியோட்டம்!

T

The Leader Desk

டிசம்பர் 8, 2024 • 5:32 AM

கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது சிரியா: ஜனாதிபதி தப்பியோட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தலைநகர் டமஸ்கஸுக்குள் நுழைந்து ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அஸாத் தப்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
  • ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதாக சிரிய இராணுவ அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சிரிய ஜனாதிபதி டமாஸ்கஸில் இருந்து இடம் குறிப்பிடாத இடம் ஒன்றுக்குத தப்பிச் சென்றுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எழுத்து அளவு:

தலைநகர் டமஸ்கஸுக்குள் நுழைந்து ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அஸாத் தப்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது தலைநகர் டமாஸ்கஸில் கிளர்ச்சியாளர்கள் அதிகாரத்தை பலப்படுத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதாக சிரிய இராணுவ அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிரிய கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸ் 'இப்போது அசாத்திடமிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டது' என்று கூறியுள்ளனர்.

சிரிய ஜனாதிபதி டமாஸ்கஸில் இருந்து இடம் குறிப்பிடாத இடம் ஒன்றுக்குத தப்பிச் சென்றுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து மாஸ்கஸில் உள்ள ஒரு முக்கிய சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி, கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.

ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டிருந்த டமாஸ்கஸ் அருகே உள்ள ஒரு பெரிய சிறையில் இருந்த அனைத்து கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை, பிரதமர் முகமது காசி அல்-ஜலாலி, சிரிய மக்கள் தேர்ந்தெடுக்கும் எந்தத் தலைமைக்கும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...