Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஈபிடிபி வேட்பாளர் அன்சாரின் வீட்டின்மீது தாக்குதல் -சாய்ந்தமருது பொலிஸார் விசாரணை!

T

The Leader Desk

டிசம்பர் 7, 2024 • 4:18 AM

ஈபிடிபி வேட்பாளர் அன்சாரின் வீட்டின்மீது தாக்குதல் -சாய்ந்தமருது பொலிஸார் விசாரணை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஈபிடிபி கட்சி சார்பாக போட்டியிட்ட அஹமட் லெப்பை அன்சாரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  • அண்மையில் நடைபெற்று முடிந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் ஈபிடிபி கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் அஹமட் லெப்பை அன்சார் (45) என்பவரின் வீட்டின் மீது கடந்த 2024.11.30 இரவு கழிவு ஒயில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
  • இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த 2024.12.01 ஆந்திகதி அன்று பாதிக்கப்பட்டவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
  • இதன்போது தாக்குதல் இடம்பெற்ற அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்கு உபட்ட வொலிவேரியன் பகுதியில் அமைந்துள்ள வீட்டுக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
எழுத்து அளவு:

ஈபிடிபி கட்சி சார்பாக போட்டியிட்ட அஹமட் லெப்பை  அன்சாரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் நடைபெற்று முடிந்த 2024  பாராளுமன்ற தேர்தலில் ஈபிடிபி கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்  அஹமட் லெப்பை  அன்சார் (45) என்பவரின்   வீட்டின் மீது கடந்த 2024.11.30 இரவு  கழிவு ஒயில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த 2024.12.01 ஆந்திகதி அன்று பாதிக்கப்பட்டவரால் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதன்போது தாக்குதல் இடம்பெற்ற அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்கு உபட்ட வொலிவேரியன் பகுதியில் அமைந்துள்ள வீட்டுக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட வேட்பாளர் மருதூர் அன்சார் தனக்கு அண்மைக் காலமாக  இனந்தெரியாத நபர்கள் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்படுதாகவும் பின்னர் இவ்வாறு வீட்டின் மீது மேற்கொண்ட கழிவு ஒயில் தாக்குதலில் வீட்டின் நுழைவாயில் உட்பட சுவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

இது தவிர  முகநூலில் சில தவறான விடயங்களை பதிவிட்டு சிலர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வந்ததாகவும் இதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடாக தெரிவித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.  

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் கல்முனை மாநகர சபையில் முன்னாள் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...