Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

கிழக்கு மாகாண அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்!

T

The Leader Desk

டிசம்பர் 6, 2024 • 10:35 AM

கிழக்கு மாகாண அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான கடிதங்களை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவினால் இன்று (06) வழங்கி வைக்கப்பட்டது.
எழுத்து அளவு:
புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான கடிதங்களை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவினால் இன்று (06) வழங்கி வைக்கப்பட்டது.
 
அதற்கமைவாக, விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்த எம்.எம்.நஸீர் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றி வந்த இஷட்.ஏ.எம்.பைஷல் முதலமைச்சின் செயலாளராகவும், ஆளுநர் செயலக செயலாளராக கடமையற்றி வந்த எல்.பி.மதநாயக்க சுகாதார அமைச்சின் செயலாளராகவும், கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்த எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக்க விவசாய அமைச்சின் செயலாளராகவும், வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கடமையற்றி வந்த எம்.கோபாலரத்ணம் பேரவைச் செயலாளராகவும், கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த ஜே.லியாக்கத்தலி மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் யாரும் நியமிக்கப்படவில்லை. 
 
புதிய அமைச்சுக்களின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (09) தங்களின் அமைச்சுக்களின் கடமைகளை பொறுப்பேற்கும்படி சகல செயலாளர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பணிப்புரை விடுத்துள்ளார்
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கிழக்கு மாகாண அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்! | Tamil Leader | We Lead the Nation