Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டை விரைவுபடுத்துங்கள் - அரசிடம் அஷ்ரப் தாஹிர் எம்.பி கோரிக்கை

T

The Leader Desk

டிசம்பர் 5, 2024 • 2:03 PM

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டை விரைவுபடுத்துங்கள் - அரசிடம் அஷ்ரப் தாஹிர் எம்.பி கோரிக்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
  • சேதமடைந்த வயல்களுக்கு 40,000 ரூபா இழப்பீடு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் அது போதுமானதாக அமையாது என்பதை அரசாங்கம் கருத்திற்கொள்ள வேண்டும்.
  • மேலும் அவர் குறிப்பிடுகையில், அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பின்னர், விவசாயிகள் தங்கள் வயல் நிலங்களை மீட்டெடுக்க அதிக பணத்தைச் செலவு செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
எழுத்து அளவு:

வெள்ளப் பெருக்கு காரணமாக அம்பாறை மாவட்டத்தில் பெரும்பாலான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயத்தை பிரதான தொழிலாக நம்பி வாழும் பல குடும்பங்கள் தமது அன்றாட வாழ்கையை கொண்டு செல்வதற்கு பல்வேறு சவால்களை எதிர்நோக்கி கொண்டிருப்பதாகவும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
 
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பின்னர், விவசாயிகள் தங்கள் வயல் நிலங்களை மீட்டெடுக்க அதிக பணத்தைச் செலவு செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறான செலவீனங்களை மேற்கொள்வதற்கான பொருளாதார வசதிகளில்லாத நிலையே அவர்களிடம் காணப்படுகிறது.
 
சேதமடைந்த வயல்களுக்கு 40,000 ரூபா இழப்பீடு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் அது போதுமானதாக அமையாது என்பதை அரசாங்கம் கருத்திற்கொள்ள வேண்டும்.
 
அதேபோல், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பாரியளவிலான கடலரிப்பினால் கடற்தொழில் நடவடிக்கைகள் கனிசமானளவு பாதிப்படைந்து மீனவ சமூகத்தின் வாழ்வாதரம் கேள்விக்குறியாகி நிற்கின்றது.
 
இது விடயம் குறித்தும் அரசங்கம் கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்வதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறும் அவ் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...