Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

தென்மேற்கு வங்கக்கடலில் மீண்டும் குழப்ப நிலை: மழை பெய்ய வாய்ப்பு!

T

The Leader Desk

டிசம்பர் 5, 2024 • 9:53 AM

தென்மேற்கு வங்கக்கடலில் மீண்டும் குழப்ப நிலை:  மழை பெய்ய வாய்ப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திகதிகளில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க இன்று (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை விளக்கினார்.
  • இது ஒரு புயலா அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமா என்பதை உடனடியாக கூற முடியாது.
எழுத்து அளவு:

திகதிகளில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க இன்று (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை விளக்கினார்.
 
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் தெற்கு அந்தமான் தீவுகளுக்கு அருகே மீண்டும் ஒரு குழப்பநிலை உருவாகியுள்ளதால், அதன் தாக்கம் குறித்து தெரிவிக்கும் வானிலை முன்னறிவிப்புகளில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் மேலும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
 
"தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு அந்தமான் தீவுகளுக்கு அருகே மீண்டும் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது. இது ஒரு புயலா அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமா  என்பதை உடனடியாக கூற முடியாது. இது வங்காள விரிகுடாவில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை நாம் காணலாம்.
 
இந்த அமைப்பு கிழக்கு கரையோரப் பகுதியிலிருந்து விலகிச் செல்வதால், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவாவில் சராசரி மழையளவு அதிகரிப்பதன் காரணமாக 9, 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மறைமுக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 
 
இது எதிர்காலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகுமா இல்லையா என்பதை உறுதி செய்வோம் என்றார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...