Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

நிந்தவூர் காசிபுல் உலூம் அரபுக் கல்லூரி தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு!

T

The Leader Desk

டிசம்பர் 4, 2024 • 8:31 AM

நிந்தவூர் காசிபுல் உலூம் அரபுக் கல்லூரி தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • (பாறுக் ஷிஹான்) மாவடிப்பள்ளி பிரதேசத்தில் இடம்பெற்ற அனர்த்ததுடன் தொடர்புடைய நிந்தவூர் காசிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு புதிய நிர்வாக சபையை நியமிக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (02) உத்தரவிட்டுள்ளார்.
  • இதனையடுத்து குறித்த அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் விரிவுரையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அதிபர் மற்றும் விரிவுரையாளர் ஆகியோர் டிசம்பர் 2 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் ஏனைய இவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
  • இவ்வாறான நிலையில் குறித்த அனர்த்தம் தொடர்பான விசாரணைகள் திங்கட்கிழமை (02) சம்மாந்துறை நீதிவான் டி.
எழுத்து அளவு:

(பாறுக் ஷிஹான்)

மாவடிப்பள்ளி பிரதேசத்தில் இடம்பெற்ற அனர்த்ததுடன் தொடர்புடைய நிந்தவூர் காசிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு புதிய நிர்வாக சபையை  நியமிக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் திங்கட்கிழமை  (02) உத்தரவிட்டுள்ளார்.
 
குறித்த  அரபுக் கல்லூரியின் தற்போதைய நிர்வாக சபையைக் கலைத்து விட்டு புதிய நிர்வாக சபையை உடனடியாக நியமிக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு நீதவான் டி. கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.
 
மாவடிப்பள்ளி பிரதேசத்தில் கடந்த 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அனர்த்தம் மாணவர்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்தமை  தெரிந்ததே.
 
இதனையடுத்து  குறித்த  அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் விரிவுரையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 
 
இவர்களில் அதிபர் மற்றும் விரிவுரையாளர் ஆகியோர் டிசம்பர் 2 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் ஏனைய இவரும்  பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
 
இவ்வாறான நிலையில் குறித்த அனர்த்தம் தொடர்பான விசாரணைகள் திங்கட்கிழமை   (02)  சம்மாந்துறை நீதிவான் டி. கருணாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிந்தவூர் காசிபூல் உலும் அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் விரிவுரையாளர் ஆகியோர் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
 
மேலும் இவ்வழக்கு விசாரணைகள் முடிவடையும்வரை குறித்த அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் விரிவுரையாளர் ஆகியோர் அரபுக் கல்லூரிக்கு செல்லக்கூடாது எனவும் நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நிந்தவூர் காசிபுல் உலூம் அரபுக் கல்லூரி தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு! | Tamil Leader | We Lead the Nation