Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

இனவாதம் இரத்தம் சிந்தும் மோதலாக மாற இடமளிக்காமல் தோற்கடிக்கப்பட வேண்டும்! - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

T

The Leader Desk

டிசம்பர் 4, 2024 • 5:41 AM

இனவாதம் இரத்தம் சிந்தும் மோதலாக மாற இடமளிக்காமல் தோற்கடிக்கப்பட வேண்டும்! - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரஜைகளை பொறுப்புக்கூறும் வகையில் புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு தயார் என அமைச்சரவை பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
  • அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • ஆனால் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டவுடன் இனவாதத்தை தோற்கடிக்க முடியாது எனவும் தற்போதுள்ள ஒவ்வொரு சட்டத்தின் கீழும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

பிரஜைகளை பொறுப்புக்கூறும் வகையில் புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு தயார் என அமைச்சரவை பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எந்தவொரு அரசியல் நோக்கத்துக்கவும் இனவாதத்தை ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த தருணத்தில் இனவாதம் இரத்தம் சிந்தும் மோதலாக மாற இடமளிக்காமல் முற்றாக தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டவுடன் இனவாதத்தை தோற்கடிக்க முடியாது எனவும் தற்போதுள்ள ஒவ்வொரு சட்டத்தின் கீழும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

 பொலிஸ் விசாரணைகளின் படி

தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களை சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துபவர்களில் கணிசமானவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் எனவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் நடத்தப்பட்டு எதிர்காலத்தில் சட்டம் அமுல்படுத்தப்பட்டு புதிய சட்டங்கள் தயாரிக்கப்படும் அல்லது இனவாதம் தோற்கடிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இனவாதம் மற்றும் மதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலை ஊக்குவிக்க இந்த அரசாங்கம் இடமளிக்காது என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...