Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

என்னை அடித்தவருக்கு என் அப்பா வயது, அதனால் நான் திருப்பி அடிக்கவில்லை! - அர்ச்சுனா எம்பி (வீடியோ)

T

The Leader Desk

டிசம்பர் 3, 2024 • 1:02 PM

என்னை அடித்தவருக்கு என் அப்பா வயது, அதனால் நான் திருப்பி அடிக்கவில்லை! - அர்ச்சுனா எம்பி (வீடியோ)

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக வளாகத்தில் வைத்து இன்று (03) தான் தாக்கப்பட்டதாக யாழ்.மாவட்ட சுயேச்சை குழு நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
  • "நான் 2:30 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்துக்குச் சென்றேன்.
  • அவர்கள் என்னை இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றனர்.
  • நாளை மாலை 4 மணிக்கு நேரம் தரலாம் என்றார்கள்.
எழுத்து அளவு:

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக வளாகத்தில் வைத்து இன்று (03) தான் தாக்கப்பட்டதாக யாழ்.மாவட்ட சுயேச்சை குழு நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும்போதே, ஒரு நபர் தன்னை அங்கு வைத்து தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
 
"நான் 2:30 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்துக்குச் சென்றேன். எனது நேரத்தை எப்படி ஒதுக்குவது என்று கேட்கவே சென்றேன். இன்று எனக்கு எதுவும் தெரிவிக்கவில்லை. நாளைக்கு நேரம் இருக்கிறதா இல்லையா என்று கேட்கச் சென்றேன். அங்கு அதிகாரிகள் இருந்தார்கள். அவர்கள் என்னை இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றனர். நாளை மாலை 4 மணிக்கு நேரம் தரலாம் என்றார்கள்.
 
"அந்த ஏற்பாட்டை எப்படி செய்வீர்கள் என்று கேட்டேன். பிறகு சுஜித் என்ற நபரையும் மற்றொரு நபரையும் போய் சந்தித்து பேசுங்கள் அவர்கள் முடிவு செய்வார்கள் என்றனர்
 
“அங்கே சென்றபோது சுஜித் என்ற நபர்  என்னை அடித்தார்.  அவருக்கு திருப்பி அடிக்க எனக்கு விருப்பமில்லை.. அவருக்கு என் அப்பா வயசு. அதனால் நான் அடிக்கவில்லை என்றார்.
 
நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வின்போது, ​​எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அர்ச்சுனா எம்.பி அமர்ந்திருந்த சம்பவம், பின்னர் சர்ச்சைக்குரியதாக மாறியது.
 
எவ்வாறாயினும், கடந்த 25ஆம் திகதி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நடைபெற்ற செயலமர்வின் போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இந்தச் சம்பவத்துக்காக மன்னிப்புக் கோரினார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...