Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

மாவடிப்பள்ளி அனர்த்தம் தொடர்பில் சுயாதீன விசாரணை தேவை! நாடாளுமன்றில் ரிஷாத் பதியுதீன் வலியுறுத்து

T

The Leader Desk

டிசம்பர் 3, 2024 • 9:25 AM

மாவடிப்பள்ளி அனர்த்தம் தொடர்பில் சுயாதீன விசாரணை தேவை! நாடாளுமன்றில் ரிஷாத் பதியுதீன் வலியுறுத்து

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்றைய தினம் ( 03) பாராளுமன்ற அமர்வில் , ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து , அவர் மேற்படி விடயத்தினை சுட்டிக்காட்டினார்.
  • இவர்களது வீடுகளுக்கு நான் நேற்றுமுன்தினம் ( 01) விஜயம் செய்திருந்தேன்.
  • அதுவரைக்கும் , பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
எழுத்து அளவு:

வீதியில், உழவு இயந்திரம் கவிழ்ந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்த துயர சம்பவம், தொடர்பில் சுயாதீனமான விசாரணையை நடத்த வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் சபையில் வலியுறுத்தினார்.

இன்றைய தினம் (03) பாராளுமன்ற அமர்வில், ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து, அவர் மேற்படி விடயத்தினை சுட்டிக்காட்டினார்.

 தொடர்ந்து பேசிய அவர்,

“அம்பாறை மாவட்டத்தில், மாவடிப்பள்ளியில் அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களது வீடுகளுக்கு நான் நேற்றுமுன்தினம் (01) விஜயம் செய்திருந்தேன். அப்போது, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பட்டினாலேயே இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்ததாக குற்றஞ்சாட்டி விசனம் வெளியிட்டனர்.

குறிப்பாக, இந்த சம்பவம் இடம்பெற்ற போது, பொலிஸார் கடமையில் இருந்திருக்கிறார்கள். வெள்ளப் பாதிப்பினால், மதரஸாவிலிருந்து வெளியேறுவதற்கு வழி இல்லாததன் காரணமாகவே, மதரஸா நிர்வாகம் மாணவர்களை உழவு இயந்திரத்தில் ஏற்றி அனுப்பியிருக்கின்றது.

இவ்வாறு அவர்கள் அந்தப் பாதையில் பயணித்த போது, வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்திருந்த நிலையில், பொலிஸார் வீதியை மூடாமல், போக்குவரத்துக்கு அனுமதி அளித்தமையானது பொறுப்பற்ற செயற்பாடாகும். அவர்களை தடுத்து நிறுத்தி நிலைமையை விளக்கியிருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, சம்பவம் இடம்பெற்று சுமார் நான்கு மணித்தியாலயங்களுக்கு பிற்பாடு, கடற்படையினர் வருகை தந்து, அவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அதுவரைக்கும், பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. குறிப்பாக, அங்கிருந்தவர்கள் இரண்டு உயிர்களை முயற்சி செய்து காப்பாற்றி இருக்கிறார்கள். இதன்போது, அங்கிருந்த பொதுமக்கள், வெள்ளத்தில் சிக்குண்டவர்களை காப்பாற்றுமாறு பொலிஸாரிடம் கெஞ்சியபோது, பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் தெரிவித்திருகின்றார்கள். பொலிஸ் நிலையத்துக்கு அவர்கள் சென்று, ஒரு மணித்தியாலம் வரை முறைப்பாட்டை செய்வதற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

ஒரு அனர்த்தம் ஏற்பட்டிருக்கிறது என்றால், அதற்கான துரித பாதுகாப்பு நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடாது, இந்த மக்களை இவ்வாறு அங்குமிங்கும் செல்லுமாறு பணித்திருப்பது கவலை தருகின்ற விடயம்.

எனவே, இந்த சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணை ஒன்றை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் முன்னெடுக்க வேண்டும் என்று, இந்த உயர் சபையில் கோரிக்கை விடுக்கின்றேன்” என்று கூறினார்.

இதற்கு பதில் வழங்கிய சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க,

“மேற்படி, சம்பவம் தொடர்பில் ஏலவே நாம் கலந்துரையாடியுள்ளோம். மேலும், கட்சித்தலைவர்கள் கூட்டத்திலும் விரிவாக ஆராய எண்ணியுள்ளோம். இந்த விடயம் தொடர்பில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வார்” என்று கூறினார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...