Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

முகநூலில் மாவீரர் தின பதிவுகள்; சந்தேக நபர் பிணையில் விடுதலை!

T

The Leader Desk

டிசம்பர் 2, 2024 • 1:14 PM

முகநூலில் மாவீரர் தின பதிவுகள்; சந்தேக நபர் பிணையில் விடுதலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு நாட்டுக்குள் மற்றும் நாடுகளுக்கு இடையில் நெருக்கடியை ஏற்படுத்த முயன்றதாகக் கூறப்படும் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த ஹர்ஷன என்ற நபரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.
  • நாட்டில் நெருக்கடி மற்றும் நாடுகளுக்கு இடையில் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் விடயங்களை சமூகவலை தளத்தில் வெளியிட்டமைக்காக சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும், சந்தேக நபருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டது.
  • இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் சிறைச்சாலை அதிகாரியினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
எழுத்து அளவு:

மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு நாட்டுக்குள் மற்றும் நாடுகளுக்கு இடையில் நெருக்கடியை ஏற்படுத்த முயன்றதாகக் கூறப்படும் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த  ஹர்ஷன என்ற நபரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.

இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் சிறைச்சாலை அதிகாரியினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சந்தேக நபரின் முகநூல் கணக்கில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள், மாவீரர்  தொடர்பான புகைப்படங்களைப் பதிவிடப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.

நாட்டில் நெருக்கடி மற்றும் நாடுகளுக்கு இடையில் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் விடயங்களை சமூகவலை தளத்தில் வெளியிட்டமைக்காக சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும், சந்தேக நபருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டது.

சந்தேகநபர் சார்பில்  முன்னிலையான சட்டத்தரணி மனோஜ் கமகே, தடைசெய்யப்பட்ட அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் தமது கட்சிக்காரர் செயற்படவில்லை என நீதிமன்றில் தெரிவித்தார்.

இரு தரப்பினரின் உண்மைகளையும் கருத்திற் கொண்ட பிரதான நீதவான், மேலதிக விசாரணைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை வழங்கியதுடன் சந்தேக நபரை இரு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

முகநூலில் மாவீரர் தின பதிவுகள்; சந்தேக நபர் பிணையில் விடுதலை! | Tamil Leader | We Lead the Nation