Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

லொஹான் ரத்வத்த தம்பதிக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு!

T

The Leader Desk

டிசம்பர் 2, 2024 • 7:47 AM

லொஹான் ரத்வத்த தம்பதிக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வாகனம் ஒன்றைப் பயன்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோரின் பிணை கோரிக்கையை நுகேகொட பிரதான நீதிவான் திருமதி ருவானி ஜயவர்தன மீண்டும் நிராகரித்துள்ளார்.
  • இதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
  • குறித்த கார் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அது சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட கார் என தெரிய வந்துள்ளது.
  • ஒக்டோபர் 30 ஆம் திகதி, அந்த காரை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் லொஹான் ரத்வத்த, மிரிஹான பொலிஸாரால் கட்டுகஸ்தோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நவம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
எழுத்து அளவு:

வாகனம்  ஒன்றைப் பயன்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோரின் பிணை கோரிக்கையை நுகேகொட பிரதான நீதிவான் திருமதி ருவானி ஜயவர்தன மீண்டும் நிராகரித்துள்ளார்.

இதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியான திருமதி ஷஷி பிரபா ரத்வத்தவின் மிரிஹானவிலுள்ள  மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

குறித்த கார் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அது சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட கார் என தெரிய வந்துள்ளது.

ஒக்டோபர் 30 ஆம் திகதி, அந்த காரை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் லொஹான் ரத்வத்த, மிரிஹான பொலிஸாரால் கட்டுகஸ்தோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நவம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பின்னர் ரத்வத்தவின் மனைவி சஷி பிரபா ரத்வத்தவும் நவம்பர் 4ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

குறித்த கார் தொடர்பில் பொலிஸார் முன்வைத்த  உண்மைகளை ஆராய்ந்து சந்தேக நபரான திருமதி ரத்வத்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

லொஹான் ரத்வத்த தம்பதிக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு! | Tamil Leader | We Lead the Nation