Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஆளுங்கட்சி எம்பிக்களின் நம்பிக்கையில் மண்ணை வாரிப்போட்ட அரசாங்கம்!

T

The Leader Desk

டிசம்பர் 1, 2024 • 12:06 PM

ஆளுங்கட்சி எம்பிக்களின் நம்பிக்கையில் மண்ணை வாரிப்போட்ட  அரசாங்கம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களை வழங்குவதற்கான தனது முந்தைய முடிவை அரசாங்கம் மாற்றியமைத்துள்ளதாக சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
  • இது தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையை அரசாங்கம் இனி தொடராது என்று தெரிவித்திருந்தார்.
  • மாறாக, தற்போது அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அமைச்சுகள் பயன்படுத்தும் V8 வாகனங்களை ஏலம் விட அரசு திட்டமிட்டுள்ளது.
எழுத்து அளவு:

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களை வழங்குவதற்கான தனது முந்தைய முடிவை அரசாங்கம் மாற்றியமைத்துள்ளதாக சிரேஷ்ட  உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கு பதிலாக, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெறுவார்கள் என்றும் மேலும் கூறினார்.

வாகனங்களை வழங்குவது தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொள்கைகளுக்கு முரணாக இருக்கலாம் என்ற கவலையைத் தொடர்ந்து இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது, அவர்களில் சிலர் ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களை ஒதுக்கினால் இதே போன்ற சலுகைகளை கோருவோம் என்று எச்சரித்தனர்.

எவ்வாறாயினும், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கான உரிமையை தக்க வைத்துக் கொள்வார்கள்.

இது தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையை அரசாங்கம் இனி தொடராது என்று  தெரிவித்திருந்தார்.

இந்த நன்மையை இலகுபடுத்துவதற்காக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படுவது வழமையாக இருப்பினும் தமது அமைச்சு அவ்வாறான பிரேரணையை முன்னெடுக்காது என அமைச்சர் விஜேபால விளக்கமளித்துள்ளார். மேலும், அமைச்சர்களுக்கான புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாறாக, தற்போது அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அமைச்சுகள் பயன்படுத்தும்  V8 வாகனங்களை ஏலம் விட அரசு திட்டமிட்டுள்ளது.

"செலவு குறைந்த, எரிபொருள் சிக்கனமான மற்றும் குறைந்த பராமரிப்பு தேவைப்படும் வாகனங்களை கொள்வனவு செய்வதனை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்" என்று அமைச்சர் விஜேபால கூறினார்.

.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...