Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

கட்சி, பேதங்களை துறந்து பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக முன்னிற்போம்! - சஜித் பிரேமதாச

T

The Leader Desk

நவம்பர் 30, 2024 • 4:27 AM

கட்சி, பேதங்களை துறந்து பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக முன்னிற்போம்! - சஜித் பிரேமதாச

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மற்றும் உண்டான ஏனைய பேதங்களைப் பொருட்படுத்தாமல் பாலஸ்தீன மக்களின் நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் ஒரு நாடாக நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.
  • ஒரு நிலைப்பாட்டில் இருந்து கொண்டு பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக முன்நிற்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
  • மனிதநேயத்தின் பெயரால் அவர்களுக்கு நீதி கிட்ட வேண்டும்.
எழுத்து அளவு:

மற்றும் உண்டான ஏனைய பேதங்களைப் பொருட்படுத்தாமல் பாலஸ்தீன மக்களின் நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் ஒரு நாடாக நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.

மனிதநேயத்தின் பெயரால் அவர்களுக்கு நீதி கிட்ட வேண்டும்.
 
இதன் பொருட்டு சர்வதேச சமூகத்துடன் கைகோர்த்து செயற்பட வேண்டும். பேச்சுக்களோடும்,  அறிக்கைகளோடும் சுருங்கி விடாது, பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமைக்காக நாமனைவரும் முன்நிற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 
 
பாலஸ்தீனத்தை இல்லாதொழிக்கும் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக அரசாங்கத்துடன்  ஒன்றாக இணைந்து எமது ஆதரவை வெளிப்படுத்துகிறோம். 
 
பலஸ்தீன விடுதலைக்காக என்றும் நாம் முன்நிற்போம். ஒரு நிலைப்பாட்டில் இருந்து கொண்டு பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக முன்நிற்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
 
இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது, ​​அந்த மக்கள் வாழும் இடங்களில் குண்டுவீச்சுக்கு எதிராக உலகத் தலைவர்கள் குரல் எழுப்ப வேண்டும். 
 
இதனை வெறும் பேச்சோடு சுருக்கிக் கொள்ளாது செயலில் காட்ட வேண்டும். பேச்சுக்களில் இருப்பது செயலிலும் இருக்க வேண்டும். இஸ்ரேலும் பாலஸ்தீனமும் சகோதரத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழும் யுகத்தை உருவாக்க அனைவரும் அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார். 
 
ஐக்கிய நாடுகள் சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் (United Nations day for solidarity with Palestine people) இன்று(29) அனுஷ்டிக்கப்படுகிறது. இதன் நிமித்தம் கொழும்பு லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவக கேட்போர் கூடத்தில் இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...