Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

நிந்தவூர் பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழு அவசரமாக கூடியது!

T

The Leader Desk

நவம்பர் 30, 2024 • 3:54 AM

நிந்தவூர் பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழு அவசரமாக கூடியது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திடீர் அனர்த்த நிலமைகள் குறித்து ஆராய்வதற்காக நேற்று (29) நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல் லதீப் ஏற்பாட்டில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர், ஏ.
  • எதிர்வரும் காலங்களில் அனர்த்தத்தின் போதான முன்னாயத்த திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்படது.
  • உதுமா லெவ்வை மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் றியாஸ், பிரதேச சபை செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
எழுத்து அளவு:

திடீர் அனர்த்த நிலமைகள் குறித்து ஆராய்வதற்காக நேற்று (29) நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல் லதீப் ஏற்பாட்டில் கலந்துரையாடல் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர், ஏ. ஆதம்பாவா, எம்.எஸ். உதுமா லெவ்வை மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் றியாஸ், பிரதேச சபை செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
IMG 20241130 085707 800 x 533 pixel
 
இதன் போது நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறித்து கிராம சேவையாளர்களிடம் கேட்டறியப்பட்டது. வெள்ள நீர் வழிந்தோடாமை காரணமாக, குடியிருப்பு காணிகளை விடவும் வீதிகள் உயரமாக அமைக்கப்பட்டிருப்பது அடையாளப்படுத்தப்பட்டது.
 
மேலும், வடிகான் துப்பரவு பணிகள் முழுமையடையாமையும் நீர் வழிந்தோடாமைக்கான காரணங்களுள் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. எதிர்வரும் காலங்களில் அனர்த்தத்தின் போதான முன்னாயத்த திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்படது.
 
விவசாயிகளின் வயல்காணி அழிவுகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதார பாதிப்புக்கள் குறித்தும் அவற்றுக்கான நஷ்ட ஈடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
 
IMG 20241130 085816 800 x 533 pixel
 
இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்
அஷ்ரப் தாஹிர், நாட்டின் பொருளாதார மேம்பாடுகளை பொறுத்தே இந்த அரசாங்கத்தின் அபவிருத்தி திட்டங்கள் அமையும். கடந்த கால ஆட்சியாளர்கள் மீது மக்கள் கொண்ட வெறுப்பின் காரணமாக மாற்றம் வேண்டியே இந்த  அரசாங்கத்துக்கு அதிகமான வாக்குகளை மக்கள் வழங்கினார்கள்.
 
மேலும் இந்த ஆட்சியில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் செயற்படுவதை அறிய முடிகிறது. அதே போல அரச அதிகாரிகளும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி சிக்கனமான முறையில் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கினாலே ஊழலற்ற ஆட்சியை முன்னெடுக்க முடியுமெனக் கூறினார்.
 
தனது வேண்டுகோளையேற்று, நிந்தவூர் பிரதான வீதி ஆலிம் விழுந்த பாலம் வெள்ள நீரினால் பாதிப்புக்குள்ளாகி முற்றாக சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டிருந்ததையடுத்து விரைவாக செயற்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலமை பொறியியலாளர் அலியாருக்கும் தடைப்பட்டிருந்த நிந்தவூர் பிரதேசத்துக்கான குடிநீர் விநியோகம் தற்காலிகமாக ஒலுவில் பிரதேச இணைப்பிலிருந்து விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட அக்கரைப்பற்று பிராந்திய நீர்வழங்கல் அதிகார சபையின் பிராந்திய பொறியியலாளர் ஹைதர் அலிக்கும் விரைவாக செயற்பட்ட ஊழியர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்  நன்றிகளை தெரிவித்திருந்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...