18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று (29) நண்பகல் 12 மணி முதல் நாளை (30) காலை 6 மணி வரை நீர் வெட்டு அமுலிலிருக்கும்.
அம்பத்தலையிலிருந்து எலிஹவுஸ் வரை நீர் விநியோகம் செய்யும் நீர் கடத்தும் குழாயில் அவசர மற்றும் அத்தியாவசிய திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நீர் விநியோகம் தடைபடுவதாக சபை தெரிவித்துள்ளது.


