Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்; மன்னாரில் கூடிய ஒருங்கிணைப்புக் குழு!

T

The Leader Desk

நவம்பர் 29, 2024 • 8:24 AM

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்; மன்னாரில் கூடிய ஒருங்கிணைப்புக் குழு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குழுக் கூட்டம், நேற்று (28) மாலை, மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
  • இதன்போது, மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை பாதிப்புகள் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
  • மேலும், தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவது குறித்தும், வெளியேற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
  • அதற்கு அமைவாக, 38 மில்லியன் ரூபாய் நிதிக்கான கோரிக்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதற்கான கோரிக்கையும் குறித்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
எழுத்து அளவு:

குழுக் கூட்டம், நேற்று (28) மாலை, மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்ஹ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் உட்பட பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், பாதுகாப்புப் துறை அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
 
இதன்போது, மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை பாதிப்புகள் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
 
நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முன்னெடுக்கப்பட்டு வரும் அத்தியாவசிய உதவிகள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் தங்கியிருப்பவர்களுக்கான சமைத்த உணவுகள் மற்றும் உலர் உணவுகளை வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
 
மேலும், தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவது குறித்தும், வெளியேற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
 
468635237 899434969039486 8180363604921306061 n
 
சீரற்ற காலநிலையால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, ஒரு வாரத்திற்கு தேவையான உலர் உணவுகளை வழங்குவது குறித்தும், கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
 
அதற்கு அமைவாக, 38 மில்லியன் ரூபாய் நிதிக்கான கோரிக்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதற்கான கோரிக்கையும் குறித்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
 
அத்துடன், மீன்பிடித்துறை, கால் நடைகள் மற்றும் விவசாய பாதிப்பு குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், அதற்கான உரிய தீர்வை பெற்றுக்கொடுக்கக் கூடிய வழிவகைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...