Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

வெள்ளைவேன் வழக்கிலிருந்து ராஜித, ரூமி முஹம்மத் விடுதலை!

T

The Leader Desk

நவம்பர் 29, 2024 • 7:35 AM

வெள்ளைவேன் வழக்கிலிருந்து ராஜித, ரூமி முஹம்மத் விடுதலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சர்ச்சைக்குரிய 'வெள்ளை வேன்' செய்தியாளர் சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
  • செப்டம்பர் 12, 2022 அன்று ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் (SPC) தலைவர் ரூமி மொஹமட் அஸீம் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் குற்றமற்றவர்கள் என ஒப்புவிக்கப்பட்டுள்ளது.
  • சுகாதார அமைச்சராக கடமையாற்றிய ராஜித சேனாரத்ன, ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தமைக்காக கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பிணையில் செல்லக்கூடிய குற்றங்கள் என நீதிமன்றம் அவதானித்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

சர்ச்சைக்குரிய 'வெள்ளை வேன்' செய்தியாளர் சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

செப்டம்பர் 12, 2022 அன்று ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் (SPC) தலைவர் ரூமி மொஹமட் அஸீம் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் குற்றமற்றவர்கள் என ஒப்புவிக்கப்பட்டுள்ளது.
 
2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், அந்தனி டக்ளஸ் பெர்னாண்டோ மற்றும் அதுல சஞ்சீவ மதநாயக்க ஆகிய இரு நபர்கள் பல குற்றச்சாட்டுகளைமுன்வைத்தனர். 
பெர்னாண்டோ, தான் கடத்தல்களில் ஈடுபட்ட "வெள்ளை வேன்" சாரதியாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டினார், அதே சமயம் மதநாயக்க புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து தங்கத்தை கொண்டு சென்றதாகக் கூறினார். 
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சிக் காலத்தில் கடத்தல்கள், படுகொலைகள், கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த அறிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
 
சுகாதார அமைச்சராக கடமையாற்றிய ராஜித சேனாரத்ன, ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தமைக்காக கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பிணையில் செல்லக்கூடிய குற்றங்கள் என நீதிமன்றம் அவதானித்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...