Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

வெள்ளப் பாதிப்பு; அவசரமாகக் கூடியது வவுனியா ஒருங்கிணைப்புக் குழு!

T

The Leader Desk

நவம்பர் 28, 2024 • 9:55 AM

வெள்ளப் பாதிப்பு; அவசரமாகக் கூடியது வவுனியா ஒருங்கிணைப்புக் குழு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குழுக் கூட்டம் , இன்று (29) காலை , வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
  • சரத்சந்திர உட்பட பிரதேச செயலாளர்கள் , அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் , பாதுகாப்புப் துறை அதிகாரிககள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
  • கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்ஹ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் , வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் , அரசாங்க அதிபர் P.A.
எழுத்து அளவு:

குழுக் கூட்டம், இன்று (29) காலை, வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்ஹ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் P.A.சரத்சந்திர உட்பட பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், பாதுகாப்புப் துறை அதிகாரிககள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சீரற்ற காலநிலையால் வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, விஷேடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக் கூட்டத்தில், வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக்  கலந்துரையாடப்பட்டது.

IMG 20241128 151831 800 x 533 pixel

இதன்போது, கருத்துத் தெரிவித்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், தொழிலுக்குச் செல்ல முடியாமல் இருப்பவர்கள் மற்றும் வெளியேற முடியாமல் குடியிருப்புக்களுக்குள் தங்கியிருப்பவர்களுக்கு சரியான முறையில் உணவுகள் வழங்கப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டியதோடு, அவர்களை அடையாளங்கண்டு, தேவையான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களை, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன், தொடர்ச்சியாக ஒருவார காலத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

மேலும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அவசர உதவிகளை துரித கதியில் முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், வெள்ளப் பாதிப்பினால் இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்துமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வெள்ளப் பாதிப்பு; அவசரமாகக் கூடியது வவுனியா ஒருங்கிணைப்புக் குழு! | Tamil Leader | We Lead the Nation