Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஈடு செய்ய முடியாத இழப்பு; சேகுவின் மறைவுக்கு இம்தியாஸ் அனுதாபம்!

T

The Leader Desk

நவம்பர் 28, 2024 • 9:25 AM

ஈடு செய்ய முடியாத இழப்பு; சேகுவின் மறைவுக்கு இம்தியாஸ் அனுதாபம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசியல்வாதியான வேதாந்தி அல்-ஹாஜ் சேகு இஸ்ஸதீனின் மறைவு கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரமின்றி முழு நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத ஓர் மாபெரும் இழப்பாகும் என முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் அல்-ஹாஜ் இம்தியாஸ் பாக்கீர் மக்கார் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் கூறியுள்ளார்.
  • பசுமரத்தாணி போல் நெஞ்சில் நிழலாடும்.
  • கிழக்கு ஈன்றெடுத்த தவப்புதல்வர்கள் பலர்.அவர்களில் ஒருவராக மர்ஹூம் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் திகழ்ந்தார்.
எழுத்து அளவு:

அரசியல்வாதியான வேதாந்தி அல்-ஹாஜ் சேகு இஸ்ஸதீனின் மறைவு கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரமின்றி முழு நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத ஓர் மாபெரும் இழப்பாகும் என முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் அல்-ஹாஜ் இம்தியாஸ் பாக்கீர் மக்கார் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் கூறியுள்ளார்.

அவர் தனது செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளராக,பாராளுமன்ற உறுப்பினராக,பிரதி அமைச்சராக,ராஜாங்க அமைச்சராக,கிழக்கு மாகாண சபை உறுப்பினராக பதவிகள் வகித்து மர்ஹூம் சேகு இஸ்ஸதீன் சமூகத்திற்கும் நாட்டிற்கும் விசேடமாக கிலக்கிற்கும் ஆற்றிய பணிகள் மகத்தானது.
 
கிழக்கு ஈன்றெடுத்த தவப்புதல்வர்கள் பலர்.அவர்களில் ஒருவராக மர்ஹூம் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் திகழ்ந்தார். மனித நேயம் மிக்க மகத்தான மனிதராக அவர் விளங்கினார்.
 
அரசியல் மூலம் சமூகத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த மகா புருஷராவார். முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்காக வேண்டி தனது இறுதி மூச்சு வரை பாடுபட்டார். அவரிடம் கற்க வேண்டிய அநேகம் உள்ளன.
 
சிறந்த தலைமைத்துவப் பண்புகளை கொண்டிருந்த மர்ஹூம் சேகு இஸ்ஸதீன் சகல சமூகங்களாலும் நன்கு மதிக்கப்பட்டவராக விளங்கினார். அரசியல்,நீதியும் நேர்மையும்,மாற்று கட்சி அரசியல்வாதிகளை மதிக்கும் நல்ல பண்புகளையும் கொண்டவராகவும் காணப்பட்ட இவரது ஆளுமை பணிகள் காலத்தால் அழியாதவை. பசுமரத்தாணி போல் நெஞ்சில் நிழலாடும்.
 
மர்ஹூம் சேகு இஸ்ஸதீன் என்னோடு மிக நெருக்கமாகவே கடைசி வரை இருந்தார். அண்மையில் கிழக்கு மாகாணத்துக்கு அரசியல் பிரசாரத்துக்காக சென்றபோது வீடு சென்று நோய் விசாரித்தேன். தனது கடைசி தருவாயிலும் கூட சமூகத்தின் எதிர்கால விமோசனம் பற்றியதாகவே இருந்தது.
 
நீதி,நேர்மை,தக்வா,இகலாஸான பண்புகளை கொண்ட இவர் அரசியலோடு பொதுப்பணியிலும் விசேடமாக கலை இலக்கியப் பணியிலும் ஈடுபட்டார்.இளம் படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளார். ஆன்மீகத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அவர் மறுமை வாழ்வுக்காக நிறையவே சம்பாதித்திருக்கிறார். எல்லாம் வல்ல நாயன் அவர் செய்த நற்பணிகளை அங்கீகரித்து மறுமையில் உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக. ஆமீன்!
 
(பேருவளை பீ.எம்.முக்தார்)
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...