Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

மன்னாரில் வெள்ளப் பாதிப்பு; தொடர்ந்தும் களத்தில் நிற்கும் ரிஷாத்!

T

The Leader Desk

நவம்பர் 26, 2024 • 3:30 PM

மன்னாரில் வெள்ளப் பாதிப்பு; தொடர்ந்தும் களத்தில் நிற்கும் ரிஷாத்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெய்துவரும் அடைமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
  • அவர்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள் மற்றும் உலர் உணவுகளை வழங்குவது தொடர்பிலும், அவசர உதவிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி, அவற்றை துரிதமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார்.
  • இன்று காலை, பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள குடியிருப்புக்கள் மற்றும் தற்காலிக நலன்புரி நிலையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட அவர், அவர்களுடன் கலந்துரையாடினார்.
எழுத்து அளவு:

பெய்துவரும் அடைமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளையும் பார்வையிடுவதற்கு, நேற்றைய தினம் மன்னாருக்கு விஜயம் செய்திருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், தொடர்ந்து இன்றைய தினமும் (26) களப்பணிகளை மேற்கொண்டிருந்தார்.
 
468447135 897370839245899 2094885990358322916 n
 
இன்று காலை, பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள குடியிருப்புக்கள் மற்றும் தற்காலிக நலன்புரி நிலையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட அவர், அவர்களுடன் கலந்துரையாடினார். அவர்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள் மற்றும் உலர் உணவுகளை வழங்குவது தொடர்பிலும், அவசர உதவிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி, அவற்றை துரிதமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார்.
 
அத்துடன், நீரில் மூழ்கியுள்ள பகுதிகளையும் பார்வையிட்ட அவர், வெள்ளநீர் வழிந்தோடுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள வழிவகைகள் குறித்தும் ஆராய்ந்தார்.
 
468447349 897371229245860 7656317182043390739 n
 
இதன்போது, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வைத்தியர்.மிக்ரா, மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முஜாஹிர், உபதவிசாளர் தெளபீக் மற்றும் இளைஞர் சேவை மன்றப் பணிப்பாளர் முனவ்வர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் உடனிருந்தனர்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...