Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

வீதியில் செல்ல முடியாதுள்ளது எனக்குப் பாதுகாப்பு தாருங்கள்! - அர்ச்சுனா இராமநாதன் எம்பி

T

The Leader Desk

நவம்பர் 26, 2024 • 3:54 AM

வீதியில் செல்ல முடியாதுள்ளது எனக்குப் பாதுகாப்பு தாருங்கள்! - அர்ச்சுனா இராமநாதன் எம்பி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆரம்ப அமர்வின்போது இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து யாழ்.மாவட்டபாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தனிப்பட்ட பாதுகாப்பைக் கோரியுள்ளார்.
  • புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (25) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன இராமநாதன், குறித்த சம்பவம் காரணமாக தமக்கு கடும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
  • ஊடகங்கள் என்னிடம் 45-50 நிமிட பேட்டி எடுக்கின்றன.
  • சாப்பிட்டுவிட்டீர்களா என்று கேட்டதற்கு, ஆம் என்றேன்.
எழுத்து அளவு:

ஆரம்ப அமர்வின்போது இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து யாழ்.மாவட்டபாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தனிப்பட்ட பாதுகாப்பைக் கோரியுள்ளார்.

கடந்த வாரம் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின்போது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தை காலி செய்ய இவர் மறுத்ததோடு இனவாதக் கருத்துக்களையும் வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (25) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன இராமநாதன், குறித்த சம்பவம் காரணமாக தமக்கு கடும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
 
“நாடாளுமன்ற ஆசனம் தொடர்பான சம்பவத்தால் என்னால் வீதியில் நடக்கக்கூட முடியவில்லை. ஊடகங்கள் என்னிடம் 45-50 நிமிட பேட்டி எடுக்கின்றன.
 
சாப்பிட்டுவிட்டீர்களா  என்று கேட்டதற்கு, ஆம் என்றேன். பின்னர் நான் விடுதலைப் புலிகள் அமைப்பின் அங்கத்தினரா என்று கேள்வி எழுப்பினர், அதற்கு நான் பதிலளிக்கவில்லை. ஆனால் இரண்டாவது கேள்விக்கு நான் பதிலளிக்காமல் இருந்ததனைத் தவிர்த்து விட்டனர், மேலும் என்னால் வீதியில்செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளேன் எனக் கூறினார்.
 
நிலைமையை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் தமக்கு வழங்கப்படும் பாதுகாப்பு எவ்வாறு எப்போது ஏற்பாடு செய்யப்படும் என நாடாளுமன்ற அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
 
பாராளுமன்ற உறுப்பினரின் கேள்விக்குப் பதிலளித்த பாராளுமன்ற பிரதிச் செயலாளர் சமிந்த குலரத்ன, இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்க வேண்டும் என்றார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...