Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ரிஷாத் எம்.பி!

T

The Leader Desk

நவம்பர் 25, 2024 • 11:48 AM

மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ரிஷாத் எம்.பி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்றைய தினம் ( 25) நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
  • மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலின் பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது , “ மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக , சுமார் 7500 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
  • எனவே , இது தொடர்பில் , மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் நாயகத்துடனும் , மேலதிக செயளாலருடனும் பேசியுள்ளோம்.
எழுத்து அளவு:

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்றைய தினம் (25) நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அத்துடன், மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களையும் பார்வையிட்ட அவர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருடனும்கலந்துரையாடினார்.

மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்  கூறியதாவது,

“மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, சுமார் 7500 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளோம்,

மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களை பார்வையிட்டதோடு, பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ள மக்களையும் சந்தித்துப் பேசினோம்.

குடியிருப்புக்கள் நீரில் மூழ்கியுள்ளதால், உணவுகளை சமைக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, இது தொடர்பில், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் நாயகத்துடனும், மேலதிக செயளாலருடனும்பேசியுள்ளோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு வழங்குவதற்கும், உலர் உணவுப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் வேண்டியுள்ளோம்.

வெள்ளநீர் வழிந்தோடுவதற்கான பணிகளை, பிரதேச செயலகம், பிரதேச சபை, நகரசபை மற்றும் RDA, RDD, போன்ற அமைப்புக்களுடன் இணைந்து மேற்கொள்ளுமாறு, அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். மேலும், அந்தப் பணிகளை செய்வதற்கான நிதி வசதிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம், எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, எதிர்வரும் தினங்கள் மிகவும் ஆபத்தாக காணப்படுவதால், பாதுகாப்புத் தரப்பினரின் உதவியுடன், மக்களின் பாதுகாப்புக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டியுள்ளோம்.

அத்துடன், பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாத்திரமே உணவுகள் வழங்கப்படுகின்றது எனவும் வெள்ளத்தினால் வெளியேற முடியாமல் வீடுகளிலேயே தங்கியுள்ள மக்களுக்கு உணவுகள் வழங்கப்படவில்லை எனவும் அறிய முடிகின்றது. இது குறித்து, துரித கதியில் கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் இருக்கும் மக்களுக்கும் தேவையான உலர் உணவுகள் மற்றும் சமைத்த உணவுகளை வழங்குவதற்கு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என்று கூறினார்.

468527752 1124403179032799 8083630370761098107 n

468452470 1124402015699582 5194032251752846615 n

468235521 1124402312366219 4675165232495164411 n

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ரிஷாத் எம்.பி! | Tamil Leader | We Lead the Nation