Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஹட்டனில் இரண்டு பஸ்கள் மோதி ஒரு பஸ் இரண்டாகப் பிளந்தது: நால்வர் காயம்!

T

The Leader Desk

நவம்பர் 25, 2024 • 4:26 AM

ஹட்டனில் இரண்டு பஸ்கள் மோதி ஒரு பஸ் இரண்டாகப் பிளந்தது: நால்வர் காயம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தனியார் பஸ் ஒன்று எதிர்திசையில் வந்த இ.போ.ச பஸ்ஸுடன் மோதியதில் தனியார் பஸ்ஸின் பின் பகுதி சேதமடைந்த்துடன நால்வர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
  • ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில் இன்று ( 25) காலை 6.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
  • ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியார் பஸ் இ.போ.ச பஸ் எதிர்த்திசையில் வந்ததை கண்டு பஸ் பிரேக் போட்டதில் தனியார் பஸ்ஸின் பின்பகுதி இ.போ.ச பஸ்ஸின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

தனியார் பஸ் ஒன்று எதிர்திசையில் வந்த இ.போ.ச பஸ்ஸுடன் மோதியதில் தனியார் பஸ்ஸின் பின் பகுதி சேதமடைந்த்துடன நால்வர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில் இன்று ( 25) காலை 6.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் இ.போ.ச டிப்போவுக்கு சொந்தமான, கினிகத்தேனையிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற பஸ்ஸும், ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸூம்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

Photo 2

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியார் பஸ் இ.போ.ச பஸ் எதிர்த்திசையில் வந்ததை கண்டு பஸ் பிரேக் போட்டதில் தனியார் பஸ்ஸின் பின்பகுதி  இ.போ.ச பஸ்ஸின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தனியார் பஸ்ஸின் பின்புறம் இரண்டாகப் பிரிந்துள்ளதாக இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், நிலவும் மோசமான வானிலையுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதி மற்றும் ஏனைய சில வீதிகள் வழுக்கும் தன்மையுடன் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் தனியார் பஸ்ஸுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Photo 3

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஹட்டனில் இரண்டு பஸ்கள் மோதி ஒரு பஸ் இரண்டாகப் பிளந்தது: நால்வர் காயம்! | Tamil Leader | We Lead the Nation