Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

அம்பாறை மாவட்டத்தின் தாழ்நிலங்களில் வெள்ள அபாயம்!

T

The Leader Desk

நவம்பர் 25, 2024 • 2:56 AM

அம்பாறை மாவட்டத்தின் தாழ்நிலங்களில் வெள்ள அபாயம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாவட்டத்தில் பெய்யும் மழையினால் தாழ் நிலங்களில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
  • தொடர்ச்சியாக கன மழை பெய்வதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் நாளாந்த கூலி வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலையினால் இலங்கையின் கிழக்கு பிராந்தியத்தில் இடியுடன் கூடிய மழைக்கு மேலும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:
மாவட்டத்தில் பெய்யும் மழையினால்  தாழ் நிலங்களில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
 
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலையினால் இலங்கையின் கிழக்கு பிராந்தியத்தில் இடியுடன் கூடிய மழைக்கு மேலும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
எனவே சகல மக்களும் அவதானமாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
 
மேலும் மேலதிக வெள்ள நீர் வடிந்தோட அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு சின்னமுகத்துவார கழிமுகம் வெட்டப்பட்டுள்ளது. 
 
ஒரு பாரிய அனர்த்தத்தை எதிர்கொள்ள அம்பாறை மாவட்ட மற்றும் கிழக்கு வாழ் மக்கள் தயாராக இருக்குமாறும் மேலும் மூன்று நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என்பதால் முன்னாயத்த  நடவடிக்கைகளில் இளைஞர்கள் உள்ளூர் சமூக நிறுவனங்கள் அவசரமாக களத்தில் இறங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, துறைவந்தியமேடு போன்ற தாழ்நில பகுதிகளில் வெள்ள நீர் பெருக ஆரம்பித்துள்ளன.
 
IMG 20241125 081303 800 x 533 pixel
 
தொடர்ச்சியாக கன மழை பெய்வதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் நாளாந்த கூலி வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
அனர்த்தங்கள் இடம்பெறும் இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக பார்வையிடச் செல்வதை தவிர்த்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
 
கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் பல  குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
 
நீர் வடிந்தோடுவதற்காக சில முகத்துவாரங்கள்  வெட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் வெள்ள நீர்  தொடர்ந்து தேங்கியே காணப்படுகிறது.
 
பெரிய நீலாவணை,  பாண்டிருப்பு , நற்பிட்டிமுனை , சேனைக்குடியிருப்பு ,காரைதீவு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று,பகுதிகளில் இப்பிரதேசத்தில் பல  குடும்பங்கள் வெள்ளத்தினால் நிர்க்கதிக்குள்ளாகி உள்ளதுடன் தற்போது அங்குள்ள மக்கள் வீடுகளுக்குள் மழை வெள்ளம் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...