Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஜனாதிபதி அநுரவின் பிறந்த தினம் இன்று!

T

The Leader Desk

நவம்பர் 24, 2024 • 4:55 AM

ஜனாதிபதி அநுரவின் பிறந்த தினம் இன்று!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிறந்த தினம் இன்று (24) 1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி பிறந்த அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தற்போது 56 வயதாகிறது.
  • ஆம் ஆண்டு களனிப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் நுழைந்த அநுரகுமார திஸாநாயக்க, 1995ஆம் ஆண்டு இளங்கலை விஞ்ஞானப் பட்டத்துடன் பட்டம் பெற்றார்.
  • இல் ஜனதா விமுக்தி பெரமுன அரசாங்கத்தின் பாரிய அடக்குமுறைக்கு உள்ளாகி மீண்டு வந்தபோது மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்த அநுரகுமார திஸாநாயக்க 1997 இல் சோசலிச மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளராக பதவி வகித்தார்.
  • ஆம் ஆண்டு ஜனதா விமுக்தி பெரமுனவின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்க, 2010ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
எழுத்து அளவு:

பிறந்த தினம் இன்று (24)

1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி பிறந்த அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தற்போது 56 வயதாகிறது.

தம்புத்தேகம ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற பின்னர், தம்புத்தேகம மத்திய மகா வித்தியாலயத்தில் நுழைந்து பல்கலைக்கழகக் கல்விக்குத் தகுதி பெறுவதற்காக விஞ்ஞானம் மற்றும் கணிதப் பிரிவில் உயர்தரப் பரீட்சையில் தோற்றியிருந்தார்.

1992ஆம் ஆண்டு களனிப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் நுழைந்த அநுரகுமார திஸாநாயக்க, 1995ஆம் ஆண்டு இளங்கலை விஞ்ஞானப் பட்டத்துடன் பட்டம் பெற்றார்.

1987 இல், அப்போதைய அரசாங்கத்தால் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிரான பாரிய பொதுப் போராட்டங்களில் மாணவர் செயற்பாட்டாளராகப் பங்களித்ததோடு சோசலிச மாணவர் சங்கத்தின் செயற்பாட்டாளராகவும் ஆனார்.

1993 இல் ஜனதா விமுக்தி பெரமுன அரசாங்கத்தின் பாரிய அடக்குமுறைக்கு உள்ளாகி மீண்டு வந்தபோது மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்த அநுரகுமார திஸாநாயக்க 1997 இல் சோசலிச மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளராக பதவி வகித்தார்.

1997 இல் ஜனதா விமுக்தி பெரமுனாவின் மத்திய குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 1998 இல் ஜனதா விமுக்தி பெரமுனவின் அரசியல் குழுவில் இணைந்தார்.

1999 மாகாண சபைத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுனவின் பிரதமர் வேட்பாளராக மத்திய மாகாண சபைக்கு போட்டியிட்டு முதல் தடவையாக அரசியலில் பிரவேசித்தார்.

2000ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

2004 ஆம் ஆண்டு குருணாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.

2008ஆம் ஆண்டு ஜனதா விமுக்தி பெரமுனவின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்க, 2010ஆம் ஆண்டு  மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

பெப்ரவரி 02, 2014 அன்று நடைபெற்ற ஜனதா விமுக்தி பெரமுனவின் 7ஆவது தேசிய மகாநாட்டில் ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைவரானார் மற்றும் 2015 இல் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

2019 ஆம் ஆண்டில், ஜனதா விமுக்தி பெரமுனா உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் ஆர்வலர்களை ஒன்றிணைத்து தேசிய மக்கள் சக்தி என்ற புதிய அரசியல் இயக்கம் உருவாக்கப்பட்டது.

செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆனார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜனாதிபதி அநுரவின் பிறந்த தினம் இன்று! | Tamil Leader | We Lead the Nation