Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

வைத்தியர் ஷாபி சகாப்தீன் விவகாரம்: பிரதிப் பொலிஸ் மா இருவர் சிஐடியின் விசாரணை வலையில்!

T

The Leader Desk

நவம்பர் 24, 2024 • 4:34 AM

வைத்தியர் ஷாபி சகாப்தீன் விவகாரம்: பிரதிப் பொலிஸ் மா இருவர் சிஐடியின் விசாரணை வலையில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மற்றும் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட சதித்திட்டமாக பொய்யான அறிக்கையை வெளியிட்டு ஆவணங்களை தயாரித்தமை தொடர்பில் குருணாகல் வைத்தியர் ஷாபி சகாப்தீன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
  • இதன்படி, வடமேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் மற்றும் நுவரெலியா மாவட்டத்துக்குப் பொறுப்பான பதில் பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த திஸாநாயக்க ஆகியோரிடம் எதிர்காலத்தில் வாக்குமூலங்களை பதிவு செய்யப்படவுள்ளன.
  • பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த கித்சிறி ஜயலத்தின் கீழ் செயற்பட்ட பொலிஸ் குழுவினால் 2019 மே 25 ஆம் திகதி குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டதற்கான சாட்சியங்கள் நேற்று முன்தினமே பெறப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
  • வைத்தியரைக் கைது செய்ததற்கு அடிப்படையாகக் கூறப்படும் அறிக்கையில் 10 ஆதாரங்கள் இருந்ததாகவும், அவைகள் ஒன்பதும் முந்தைய நாள் தயாரிக்கப்பட்டவை என்பதும் தற்போதைய விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
எழுத்து அளவு:

மற்றும் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட சதித்திட்டமாக பொய்யான அறிக்கையை வெளியிட்டு ஆவணங்களை தயாரித்தமை தொடர்பில்   குருணாகல் வைத்தியர் ஷாபி சகாப்தீன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரையின் பிரகாரம், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையின் கீழ் இது தொடர்பில் சிலரிடம் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன.
 
இதன்படி, வடமேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் மற்றும் நுவரெலியா மாவட்டத்துக்குப் பொறுப்பான பதில் பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த திஸாநாயக்க ஆகியோரிடம் எதிர்காலத்தில்  வாக்குமூலங்களை பதிவு செய்யப்படவுள்ளன.
 
பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த கித்சிறி ஜயலத்தின் கீழ் செயற்பட்ட பொலிஸ் குழுவினால் 2019 மே 25 ஆம் திகதி குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டதற்கான சாட்சியங்கள் நேற்று முன்தினமே பெறப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. .
 
வைத்தியரைக் கைது செய்ததற்கு அடிப்படையாகக் கூறப்படும் அறிக்கையில் 10 ஆதாரங்கள் இருந்ததாகவும், அவைகள் ஒன்பதும் முந்தைய நாள் தயாரிக்கப்பட்டவை என்பதும் தற்போதைய விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
 
குருணாகல் போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் சகாப்தீன் மொஹமட் ஷாபி, சிசேரியன் மூலம் தாய்மார்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தியதாக சில தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டிருந்த அவரை இது தொடர்பான வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்யுமாறு குருணாகல் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இது தொடர்பான விசாரணைகளின் பகுதிகளின் அடிப்படையில் அவருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்கான ஆதாரங்கள் இல்லாததால், அவருக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கவில்லை என சட்ட மா அதிபர் நீதிமன்றத்துக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் எழுத்துமூலம் அறிவித்ததை அடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...