Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச

T

The Leader Desk

நவம்பர் 23, 2024 • 2:20 PM

தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்பில் எதிர்காலத்தில் அறியத் தருவோம்.
  • ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இன்று (23) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். உண்மையைச் சொல்வதானால், பட்டியலில் உள்ள அனைவரும் மிகவும் பொருத்தமானவர்கள்.
  • வீழ்ச்சி கண்டுள்ள நாட்டையும் 220 இலட்சம் மக்களையும் மீட்டெடுப்பதே தனது எண்ணப்பாடாக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எழுத்து அளவு:

தொடர்பில் எதிர்காலத்தில் அறியத் தருவோம். அவை முறையான ஒழுங்கில் முன்னெடுக்கப்படும்.

தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பில் எவ்வித நெருக்கடியும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இன்று (23) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.  

உண்மையைச் சொல்வதானால், பட்டியலில் உள்ள அனைவரும் மிகவும் பொருத்தமானவர்கள். நாட்டை கட்டியெழுப்புவதில் இவர்கள் அனைவருக்கும் பெரும் பொறுப்பு இருக்க வேண்டும். இந்த பட்டியலில் மிகவும் அநுபவம் வாய்ந்தவர்கள் உள்ளனர். வீழ்ச்சி கண்டுள்ள நாட்டையும் 220 இலட்சம் மக்களையும் மீட்டெடுப்பதே தனது எண்ணப்பாடாக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை குறித்து நாட்டு மக்களாலே ஒரு முடிவுக்கு வரலாம். பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமையவே அனைவரும் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி பின்பற்றும் கொள்கைகள் காணப்படுகின்றன. இந்த கொள்கைகள் மற்றும் திட்டங்களை நம்பும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நேர்மறையான கருத்துக்கள் உள்ள அனைவரும் எம்மோடு சேரலாம். இந்தக் கொள்கைகளோடு இணங்குபவர்கள் எம்மோடு சேர்ந்து கொள்ளலாம் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...