Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்பிக்கள் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான்!

T

The Leader Desk

நவம்பர் 23, 2024 • 6:24 AM

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்பிக்கள் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேசிய பட்டியலில் எஞ்சியுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் தீர்மானிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
  • நேற்று மாலை (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • அதற்காக டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், சுஜீவ சேனசிங்க மற்றும் மனோ கணேசன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சி தனது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரை முன்னைய பாராளுமன்றத்துக்கு உள்வாங்க 11 மாதங்கள் எடுத்ததாக கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
எழுத்து அளவு:

தேசிய பட்டியலில் எஞ்சியுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் தீர்மானிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலில் ஏலவே உள்வாங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மீதமுள்ள நான்கு தேசியப் பதவிகள் இன்னும் பெயரிடப்படவில்லை. அதற்காக டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், சுஜீவ சேனசிங்க மற்றும் மனோ கணேசன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர எமது கூட்டுக் கட்சிகள் இரண்டினது இருவரின் பெயரும் தேசியப்பட்டியலுக்கு குறித்த கட்சிகளின் தலைவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சி தனது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரை முன்னைய பாராளுமன்றத்துக்கு உள்வாங்க 11 மாதங்கள் எடுத்ததாக கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எனவே, எமது கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களை உரிய நேரத்தில் நியமிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...