Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

எனக்கு கொலை அச்சுறுத்தல்: வடக்கிலிருந்து உடனடியாக என்னை இடமாற்றுங்கள்: வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம்.ஹனிபா கோரிக்கை!

T

The Leader Desk

நவம்பர் 23, 2024 • 1:23 AM

எனக்கு கொலை அச்சுறுத்தல்: வடக்கிலிருந்து உடனடியாக என்னை  இடமாற்றுங்கள்: வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம்.ஹனிபா  கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரிடம் உருக்கமான கோரிக்கை யை விடுத்துள்ளார்.
  • எனினும் கடந்த 19 ஆம் திகதி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் துரதிர்ஷ்டவசமான கரு மகப்பேறு மரணம் நிகழ்ந்துள்ளது.
  • அதனைத் தொடர்ந்து 20 ஆம் திகதி புதன்கிழமை அன்று மாவட்டச் செயலாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ,மத்திய சுகாதார அமைச்சின் பிரதி நிதிகள் மற்றும் மதத் தலைவர்களுடன் இந்த மரணம் தொடர்பாக சுகாதார அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்க மளித்தோம்.
எழுத்து அளவு:

வடக்கில் இருந்து உடனடியாக   இடமாற்றம் செய்ய கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்  ஆசாத் எம்.ஹனிபா மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரிடம் உருக்கமான கோரிக்கை யை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு  வைத்திய அத்தியட்சகராக   நான் நியமிக்கப் பட்டதில் இருந்து பல சுகாதார தர மேம்பாடுகள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல் படுத்துவதன் மூலம் சுகாதார சேவைகளை மேம்படுத்த என்னை அர்ப்பணித்து வந்துள்ளேன்.

எனினும் கடந்த 19 ஆம் திகதி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் துரதிர்ஷ்டவசமான கரு மகப்பேறு மரணம் நிகழ்ந்துள்ளது.

குறித்த தாய் மற்றும் சிசுவின்  மரணம் தொடர்பாக உரிய நடவடிக்கையை முன்னெடுத்து வந்தேன்.

எனினும் மகப்பேற்று விடுதியில் புகுந்த ஒரு குழுவினர பிரசவ அறைக்குள் நுழைந்து மருத்துவமனையின் சொத்துக்களைச் சேதப்படுத்தினர்.

நான் அங்கு சென்றபோது நிலைமை குறித்து விவாதிக்கவும், வருகை தந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பொலிஸார் அதிகாரிகளின் உதவியை நாடினேன். 

எனினும்  குறித்த குழுவினர் என்னை தனிப்பட்ட முறையில் குறி வைத்து ,தாக்க முயன்றனர். அவர்கள் என்னை கொலையாளி என்று கூறி கூச்சலிட்டனர். அவர்களில் சிலர் என்னைத் தாக்க முயன்றனர்.

அதனைத் தொடர்ந்து 20 ஆம் திகதி புதன்கிழமை  அன்று மாவட்டச் செயலாளர்,  வடமாகாண சுகாதார  அமைச்சின் செயலாளர் ,மத்திய சுகாதார அமைச்சின் பிரதி நிதிகள்  மற்றும் மதத் தலைவர்களுடன் இந்த மரணம் தொடர்பாக சுகாதார அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்க மளித்தோம்.

இதற்கிடையில் அன்றைய தினம் மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின்   நுழைவாயிலை முற்றுகையிட்டு ஒரு பெரிய கூட்டம் அங்கு அவசர சிகிச்சை பிரிவு மற்றும் வெளி நோயாளர் பிராவுக்குள்  நுழைந்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார்  மாவட்ட செயலாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்  மற்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரிடம்  என்னை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

 நான் எனது குடியிருப்பிலிருந்து தொலைதூரத்துக்குப் பயணிப்பதால் இது எனக்கு கடுமையான உயிருக்கு ஆபத்தான எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

எனக்கு எதிரான  தனிப்பட்ட முறையில்   சமூக ஊடகங்களில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும் எனக்கு எதிரான பிரச்சாரங்கள் பொது கிளர்ச்சி மற்றும் அமைதியின்மையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே எனக்கு  வட மாகாணத்தில் பாதுகாப்பற்ற பணிச் சூழல் எனக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே எனது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தயவு செய்து என்னை அவசரமாக வடக்கு மாகாணத்திற்கு வெளியே மாற்ற நடவடிக்கை எடுக்கவும்.

எனக்கு எதிராக விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளேன்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...