Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

வாகரையில் மின்சார சபைக்கு எதிராக பிரதேச மக்கள் போராட்டம் வெடித்தது!

T

The Leader Desk

நவம்பர் 22, 2024 • 11:12 AM

வாகரையில் மின்சார சபைக்கு எதிராக பிரதேச மக்கள் போராட்டம் வெடித்தது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சபையின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக் கிழமை (22) மக்கள் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
  • நாம் கெளரவ ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் எனவும் இம்மக்கள் தெரிவித்தனர். இதன் போது வாகரை பொலிஸார் ஸ்தலத்துக்கு வருகை தந்து பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
  • மின்சார சபையின் இச் செயற்பாட்டினால் பாடசாலை மாணவர்களின் பரீட்சை கால இரவு நேர கற்றல் நடவடிக்கை முற்றாக பாதிப்படைவதுடன் அவர்களது எதிர்காலம் பாதிப்படைய இது ஏதுவாக அமையுமென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:

சபையின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக் கிழமை (22) மக்கள் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வாகரை பிரதேச செயலக பிரிவில் உள்ள வாகரை, ஊரியன் கட்டு, தட்டு முனை, கதிரவெளி உள்ளிட்ட பல கிராமங்களில் நாளாந்தம் பல மணி நேரம் முன்னறிவித்தல் எதுவுமின்றி  கடந்த இரண்டு மாதங்களாக மின்வெட்டை மேற்கொள்வதால் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள  பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட கிராம பொதுமக்களும் தமது நாளாந்த கடமைகள் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் சிரமப்படுவதாக தெரிவித்தே இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
மின்சார சபையின் இச் செயற்பாட்டினால் பாடசாலை மாணவர்களின் பரீட்சை கால இரவு நேர கற்றல் நடவடிக்கை  முற்றாக பாதிப்படைவதுடன் அவர்களது எதிர்காலம் பாதிப்படைய இது ஏதுவாக அமையுமென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
 
IMG 20241122 163750 800 x 533 pixel
 
"துண்டிக்காதே துண்டிக்காதே முன்னறிவித்தல் இன்றி மின்சாரத்தை துண்டிக்காதே", "மின்சார சபையே மின்சார சபையே பாடசாலை மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்காதே" போன்ற வாசகங்களை பொறித்த பதாதைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்,
 
இன்றில் இருந்து ஒரு வார காலத்துக்குள் மின்சார துண்டிப்பு பிடிச்சினை நிவர்த்தி செய்யப்படாவிட்டால் இப்பிரச்சனையினை . நாம் கெளரவ ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் எனவும் இம்மக்கள் தெரிவித்தனர். 
 
இதன் போது வாகரை பொலிஸார் ஸ்தலத்துக்கு வருகை தந்து பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
 
தமக்கான தீர்வை பெற்றுத் தருமாறு வாகரை பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்தீபனிடம் மகஜரை கையளித்ததனைத் தொடர்ந்து பிரதே செயலாளரின்  வாக்குறுதியைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...