Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்!

T

The Leader Desk

நவம்பர் 22, 2024 • 10:09 AM

குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கள் கைரேகையை பதியுமாறு அந்நாட்டின உள்துறை அமைச்சகம் விசேட அறிவிப்பை விடுத்துள்ளது.
  • இது தவிர, அலி சபா அல் சலீம், உம் அல்-ஹைமன் மற்றும் ஜஹ்ரா பகுதிகளில் அமைந்துள்ள நபர்களின் புலனாய்வுத் துறையிலும் கைரேகையை மேற்கொள்ளலாம்.
  • கைரேகையை வழங்காத வெளிநாட்டினரின் அனைத்து அரசு மற்றும் வங்கி நடவடிக்கைகளும் தடைபடும் என "தி டைம்ஸ் குவைத்" நாளிதழில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கள் கைரேகையை பதியுமாறு அந்நாட்டின உள்துறை அமைச்சகம் விசேட அறிவிப்பை விடுத்துள்ளது.

கைரேகைகளை  பதிவதற்கான கடைசி திகதி டிசம்பர் 31 என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
குவைத்தில் பணிபுரியும் அனைத்து இலங்கை பணியாளர்களும் உள்துறை அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
அதன்படி, குவைதில் சேர்ந்த     "Sahel" மென்பொருளைப் பயன்படுத்தியோ அல்லது "Matta" எனப்படும் மின்னணு முறை மூலமாகவோ கைரேகையை பதிவு பதிவு செய்யலாம். 
 
மேலும், ஒன்லைன் முறையில் கைரேகைகள் பதிய அருகாமையில் பொருத்தமான இடத்தை தேர்வு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 
ஹவாலி, ஃபர்வானியா, அஹ்மத், முபாரக் அல் கபீர், ஜஹ்ரா ஆகிய இடங்களில் அமைந்துள்ள பாதுகாப்பு இயக்குனரக அலுவலகங்களில் இது வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
 
இது தவிர, அலி சபா அல் சலீம், உம் அல்-ஹைமன் மற்றும் ஜஹ்ரா பகுதிகளில் அமைந்துள்ள நபர்களின் புலனாய்வுத் துறையிலும் கைரேகையை மேற்கொள்ளலாம்.
 
கைரேகையை வழங்காத வெளிநாட்டினரின் அனைத்து அரசு மற்றும் வங்கி நடவடிக்கைகளும் தடைபடும் என "தி டைம்ஸ் குவைத்" நாளிதழில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்! | Tamil Leader | We Lead the Nation