Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

சர்ச்சைக்கு வழிவகுத்த குற்றங்கள் அம்பலப்படுத்தப்படும்! -ஜனாதிபதி அநுரகுமார

T

The Leader Desk

நவம்பர் 21, 2024 • 7:05 AM

சர்ச்சைக்கு வழிவகுத்த குற்றங்கள் அம்பலப்படுத்தப்படும்! -ஜனாதிபதி அநுரகுமார

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நம்பிக்கை வைத்து எமக்கு அதிகாரத்தை வழங்கிய அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தமக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைவரையும் இந்நாட்டு பிரஜையாகவே பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
  • சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று.
  • ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் தனது கன்னி அமர்வில் புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்து வருகிறார்.
எழுத்து அளவு:

நம்பிக்கை வைத்து எமக்கு அதிகாரத்தை வழங்கிய அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தமக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைவரையும் இந்நாட்டு பிரஜையாகவே பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் தனது கன்னி அமர்வில் புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்து வருகிறார்.

கொள்ளைப் பிரடனத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் தனியொரு கட்சி நாட்டை ஆள வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.

எனவே, அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு தாம் கடமைப்பட்டிருப்பதாகவும், அதற்கு பொறுப்புக் கூறுவதாகவும் மக்களுக்கான பொறுப்பு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இந்த தருணத்தில் இருந்து ஜனாதிபதி என்ற வகையில் மக்களின் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் எனவும், நாம் ஒரே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளோம் என்பதை தேர்தல் பிரசாரத்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேலும், இலங்கையில் மீண்டும் இனவாத அரசியலுக்கு எமது நாட்டில் இடமில்லை என்றும் எந்தவொரு மதவாதத்திற்கும் இடமில்லை. 

ஆனால் எமது நாட்டில் மீண்டும் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக இனவாத, மதவாத, கோஷங்களை எழுப்புவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது என நான் உறுதியளிக்கிறேன்.

அனைவரும் மக்கள் பிரதிநிதிகள் என்றால், பாராளுமன்றத்தில் கூறப்படும் அனைத்தையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். வலுவான அரச சேவையின்றி நாடு ஒருபோதும் முன்னோக்கி செல்லமுடியாது.

திறமையான பொதுச்சேவை, மக்களின் நல்வாழ்வுக்காகச் செயல்படும் பொதுச் சேவை இந்த நாட்டில் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்காக அரசு ஊழியர்களிடம் இருந்து எமக்கு பலமான ஆணை வழங்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன். அதில் கவனம் செலுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு குடிமகனும் அவரவர் மதம், கலாசாரம் மற்றும் மொழியின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்படக் கூடாது. அரசியல் மாற்றங்கள் வரலாம். சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. எனவே, அனைவருக்கும் அச்சம் மற்றும் சந்தேகம் இல்லாத ஜனநாயக மற்றும் சுதந்திரமான அரசை உருவாக்குவது நமது பொறுப்பு. அதை நிறைவேற்றுவோம் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.

சட்டம் அமுல்படுத்தப்படுகிறது என்ற உணர்வு மக்களிடம் இருக்க வேண்டும். கடந்த காலத்தில் நாட்டில் நடந்தது சட்டத்தின் மீது மக்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டது. சட்டம் ஒழுங்கு மீது சாமானிய மக்களின் நம்பிக்கை உடைக்கப்பட்டுள்ளது. வலுப்படுத்தாமல் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த முடியாது, சட்டத்தின் மீதுள்ள மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய குற்றச் செயல்கள் தொடர்பில் மீள விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதம் தருகிறேன். சர்ச்சைக்கு வழிவகுத்த குற்றங்கள் அம்பலப்படுத்தப்படும், அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படுவார்கள் என்று நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறோம். சட்டம் மற்றும் அனுமதிக்கும் ஒரு நாட்டை நாங்கள் விரும்புகிறோம் என்றார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சர்ச்சைக்கு வழிவகுத்த குற்றங்கள் அம்பலப்படுத்தப்படும்! -ஜனாதிபதி அநுரகுமார | Tamil Leader | We Lead the Nation