Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஜனநாயக நாட்டில் தேர்தல் காலங்களில் ஒருவரையொருவர் விமர்சிப்பது வழக்கம்தான் என்கிறார் ஹிஸ்புல்லாஹ்!

T

The Leader Desk

நவம்பர் 19, 2024 • 12:49 PM

ஜனநாயக நாட்டில் தேர்தல் காலங்களில் ஒருவரையொருவர் விமர்சிப்பது வழக்கம்தான் என்கிறார் ஹிஸ்புல்லாஹ்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காலங்களில் ஒருவரையொருவர் விமர்சிப்பது வழக்கமான ஒரு விடயம்தான்.
  • இந்த நாட்டின் உதவி இல்லா விட்டாலும் வெளிநாட்டு உதவியைக் கொண்டு காணிகளை வாங்கி கட்டடங்களைக் கட்டி அனைத்து வளங்களையும் கொண்ட ஒரு வைத்தியசாலையாக அதனை நான் மாற்றுவேன்.
  • ஆனால், அதுதான் வாழ்க்கை என்று நினைத்து விடக் கூடாது என்று எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
எழுத்து அளவு:
காலங்களில் ஒருவரையொருவர் விமர்சிப்பது வழக்கமான ஒரு விடயம்தான். ஆனால், அதுதான் வாழ்க்கை என்று நினைத்து விடக் கூடாது என்று எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
 
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமைக்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாலில் இடம்பெற்றது.
 
அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,
 
தேர்தல் காலங்களில் மாற்றுக் கட்சிக்காரர்களை நாங்கள் பேசியிருப்போம். அவர்களும் எங்களைப் பேசியிருப்பார்கள். அதையெல்லாம் மறந்து இனிவரும் காலங்களில் நாம் அனைவரும் சகோதரர்கள் எனும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
 
மீராவோடை வைத்தியசாலை மிகத் தரமான வைத்தியசாலையாக மாற்றப்பட வேண்டும். கல்குடா தொகுதி மக்கள் பயனடையும் விதத்தில் ஐ.சி.யு உட்பட அனைத்து வசதிகளும் கொண்ட மிகப் பலமான ஒரு வைத்தியசாலையாக மாற்றப்பட வேண்டும் என்று நான் நினைத்துள்ளேன்.
 
இந்த நாட்டின் உதவி இல்லா விட்டாலும் வெளிநாட்டு உதவியைக் கொண்டு காணிகளை வாங்கி கட்டடங்களைக் கட்டி அனைத்து வளங்களையும் கொண்ட ஒரு வைத்தியசாலையாக அதனை நான் மாற்றுவேன்.
 
அத்துடன், கல்வியில் பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இதெல்லாம் செய்வதாக இருந்தால் நமக்குள் அரசியல் வேறுபாடுகள் இருக்கக் கூடாது.
 
முஸ்லிம் காங்கிரஸ் என்றும் எஸ்.ஜே.பி. என்றும் என்.பி.பி. என்றும் நாங்கள் இருந்தால் இந்த அபிவிருத்திப் பணிகளைச் செய்ய முடியாது. நாங்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டால் மாத்திரமே இதனை செய்ய முடியும்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிப் பிரச்சினை காணப்படுகிறது. நான் ஜனாதிபதியை சந்தித்து விசேட ஆணைக்குழுவை அமைத்து காணிப் பிரச்சினை, பிரதேச சபை பிரச்சினை, எல்லைப் பிரச்சினை, நிருவாகாப் பிரச்சினை ஆகிய எல்லாவற்றுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில், முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், கல்குடா தொகுதி அமைப்பாளருமான சட்டத்தரணி ஹபீப் றிபான், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள்,  பள்ளிவாசல் நிர்வாகத்தினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...