Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

அம்பாறையில் கைதான முன்னாள் இராணுவ சிப்பாயிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி தொடர்பில் விசாரணை!

T

The Leader Desk

நவம்பர் 19, 2024 • 8:41 AM

அம்பாறையில் கைதான முன்னாள் இராணுவ சிப்பாயிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி தொடர்பில் விசாரணை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரரிடம் மேலதிக விசாரணைகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
  • அம்பாறை வாவின்ன பரகஹகலே பகுதியில் வைத்து கடந்த 17 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நபர் பின்னர் இகினியாகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
  • சந்தேக நபர் 51 வயதான ஓய்வுபெற்ற இராணுவ சிறப்புப் படை வீரராவார்.
  • அவரது வீட்டுக் காணியில் புதைக்கப்பட்டிருந்த குறித்த 9 எம்.எம் துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
எழுத்து அளவு:
 கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரரிடம்  மேலதிக விசாரணைகள் பல கோணங்களில்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
 அம்பாறை வாவின்ன பரகஹகலே பகுதியில் வைத்து கடந்த 17 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நபர் பின்னர் இகினியாகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
 
அம்பாறை விசேட அதிரடிப் படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில்  இகினியாகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  வாவின்ன  பரகஹகலே பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து  வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ ரக தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்கள் மற்றும் இரண்டு தோட்டா மெகசீன்கள்  மற்றும் ஆயுதங்களை சுத்தம் செய்யும் கருவியை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டார்.
 
சந்தேக நபர் 51 வயதான ஓய்வுபெற்ற இராணுவ சிறப்புப் படை வீரராவார்.
 
அவரது வீட்டுக்  காணியில் புதைக்கப்பட்டிருந்த  குறித்த 9 எம்.எம்  துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
 
அத்துடன்  துப்பாக்கியின் இலக்கம் அழிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் தொடர்பிலும் துப்பாக்கி தொடர்பிலும்  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 
மேலும் சந்தேநக நபர் குறித்த துப்பாக்கியை   போர் நடைபெற்ற காலத்தில் வட பகுதியில் கடமையில் இருந்து எடுத்து வந்தாரா அல்லது விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் பாவித்த துப்பாக்கியா அல்லது இராணுவ களஞ்சிய சாலையில் இருந்து எடுக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதா என பல கோணங்களில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...