Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

கொழும்பில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இரட்டிப்பாக்க கட்சி எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை! -மனோ கணேசன்

T

The Leader Desk

நவம்பர் 18, 2024 • 4:31 PM

கொழும்பில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இரட்டிப்பாக்க கட்சி எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை! -மனோ கணேசன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆட்சி அமைக்கும் அநுரகுமார திசாநாயக்க அரசுக்கும் எனது வாழ்த்துக்கள்.
  • பின்னர் நான் சாம்பலில் இருந்து எழுந்து வந்தேன்.
  • நாட்டின் தேசிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், தமிழர் பிரதிநிதித்துவத்தை இரட்டிப்பு ஆக்க நமது கட்சி எடுத்து கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை.
எழுத்து அளவு:

வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆட்சி  அமைக்கும் அநுரகுமார திசாநாயக்க அரசுக்கும் எனது வாழ்த்துக்கள்.

நாட்டின் தேசிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், தமிழர் பிரதிநிதித்துவத்தை இரட்டிப்பு ஆக்க நமது கட்சி எடுத்து கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. இன்று இருந்து ஒரு தமிழர் பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய் விட்டது. இதையிட்டு நான் மன வருத்தம் அடைகிறேன்.

எனினும் கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், இருந்த தமது இரண்டு பிரதிநிதித்துவங்களை தக்க வைத்து கொண்டு, இன்று அதை மூன்றாகவும் அதிகரித்து கொண்ட, சகோதர தமிழ் பேசும் முஸ்லிம் உடன்பிறப்புகளை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

தமுகூ தலைவர் மனோ கணேசன் மேலும் கூறி உள்ளதாவது;   

அடித்துள்ள அரசியல் அலையின் மத்தியிலும் நாடெங்கும் மக்கள், எமது வேட்பாளர்கள் போட்டியிட்ட ஏழு மாவட்டங்களில் 237,123 விருப்பு வாக்குகளை எமது வாக்காளர்கள், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வழங்கி உள்ளார்கள்.  அவர்களுக்கு விசேட நன்றிகள்.

பல இனங்கள் வாழும் ஒரு நாட்டில் ஒவ்வொரு இனமும் தமது  பிரதிநிதித்துவத்தை தக்க வைத்து கொள்வது, அதிகரிப்பது, இயல்பான ஜனநாயக உரிமை  செயற்பாடுகளாகும். ஆனால், கொழும்பு தலைநகர் மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம் தொடர்பில் அது இன்று சாத்திய படவில்லை. இதை கண்டு மன வருத்தம் அடைகிறேன்.

2010ம் வருடம் கண்டி மாவட்டத்து தமிழர் பிரதிநிதித்துவத்தை பெற ஒரு கட்சி தலைவராக மேற்கொண்ட முயற்சியின் போது, இத்தகைய ஒரு வெற்றி அடையாத சூழலை நான் எதிர் கொண்டேன். பின்னர் நான் சாம்பலில் இருந்து எழுந்து வந்தேன். அது வரலாறு. ஆனால், அப்படி போராடி பெற்ற கண்டி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவமும் இன்று இல்லாமல் போயுள்ளது. அதையிட்டும் நான் கவலை அடைகிறேன்.

நடந்து முடிந்த தேர்தலில் கட்சியின் சக கொழும்பு மாவட்ட புதிய வேட்பாளர் தம்பி லோஷன் ரகுபதி பாலஸ்ரீதரன் புதிய அனுபவங்கள் பலவற்றை கற்று கொண்டார். கடும் முயற்சியாளர், சமூக பற்றாளரான அவருக்கு எனது பாராட்டுகள். அவரது எதிர்காலம் சிறப்பாக அமையும்.

கடும் அரசியல் அலையின் மத்தியில், தமிழ் வாக்காளர் சிறுபான்மையாக வாழும் ஏனைய இரத்தினபுரி, கேகாலை, கண்டி, பதுளை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்ட எமது வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், இருந்த தமது இரண்டு பிரதிநிதித்துவங்களை தக்க வைத்து கொண்டு, இன்று அதை மூன்றாக அதிகரித்தும் கொண்ட, தமிழ் பேசும் சகோதர முஸ்லிம் உடன்பிறப்புகளுக்கு எனது இதயபூர்வ பாராட்டுகள்.

எமக்கு வாக்களித்தாலும், வாக்களிக்கா விட்டாலும் தேர்தல் வாக்களிப்பில் கலந்து கொண்ட அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றிகள். கடுமையாக உழைத்த கட்சி பணியாளர்களுக்கும் எனது பாராட்டுகள்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...