Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஆதம்பாவாவுக்கு தேசியப்பட்டியல்: சாய்ந்தமருதில் சந்தோசக் கொண்டாட்டம்!

T

The Leader Desk

நவம்பர் 18, 2024 • 11:55 AM

ஆதம்பாவாவுக்கு தேசியப்பட்டியல்: சாய்ந்தமருதில் சந்தோசக் கொண்டாட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேசிய மக்கள் சக்தி (திசைகாட்டி) சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட அபூபக்கர் ஆதம்பாவா 23,075 வாக்குகளைப் பெற்றும் நாடாளுமன்றம் செல்ல முடியாதிருந்தது.
  • இந்நிலையில், தேசியப் பட்டியல் ஊடாக அவரது பெயர் தெரிவு செய்யப்பட்டமையைக் கொண்டாடும் முகமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இரவு சாய்ந்தமருதூரில் பிரதான வீதி எங்கும் பட்டாசு கொளுத்தி மக்கள் சந்தோஷ ஆரவாரத்துடன் ஈடுபடுபட்டனர்.
  • கல்வியில் முதுகலை பட்டதாரி மற்றும் அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தமான பட்டம் பெற்றுள்ள இவர், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதித் தலைவராவார்.
எழுத்து அளவு:
தேசிய மக்கள் சக்தி (திசைகாட்டி) சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட அபூபக்கர் ஆதம்பாவா 23,075 வாக்குகளைப் பெற்றும் நாடாளுமன்றம் செல்ல முடியாதிருந்தது.
 
இந்நிலையில், தேசியப் பட்டியல் ஊடாக அவரது பெயர் தெரிவு செய்யப்பட்டமையைக் கொண்டாடும் முகமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)  இரவு சாய்ந்தமருதூரில் பிரதான வீதி எங்கும் பட்டாசு கொளுத்தி மக்கள் சந்தோஷ ஆரவாரத்துடன் ஈடுபடுபட்டனர்.
 
தேசியப்பட்டியல் மூலமாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அபூபக்கர் ஆதம்பாவா, தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயம் மற்றும் கல்முனை சாஹிராக் கல்லூரியிலும் கற்று, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் உயிரியல் இளங்கலை பட்டம் பெற்றார்.
 
கல்வியில் முதுகலை பட்டதாரி மற்றும் அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தமான பட்டம் பெற்றுள்ள இவர், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதித் தலைவராவார். தற்போது கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியில் உயிரியல் ஆசிரியராக கடமையாற்றுகின்றார்.
 
தற்போது தேசிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி அமைப்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் செயற்படுகிறார்.
 
IMG 20241118 172106 800 x 533 pixel
IMG 20241118 172052 800 x 533 pixel
 
ஏ. ஆதம்பாவா
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...