Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

இந்த நாட்டில் பிளவு அரசியல் இனித் தேவையில்லை! -ஜனாதிபதி அநுரகுமார

T

The Leader Desk

நவம்பர் 18, 2024 • 11:04 AM

இந்த நாட்டில் பிளவு அரசியல் இனித் தேவையில்லை! -ஜனாதிபதி அநுரகுமார

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசியல் வரைபடம் இதுவரை வடக்குக்கு எதிரான தெற்கின் அரசியலாகவும், தெற்குக்கு எதிரான வடக்கின் அரசியலாகவும் இருந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
  • இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
  • அதன்படி, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளின் பொதுமக்களின் அபிலாஷைகளை ஒரே மையத்துக்கு கொண்டு செல்வதில் இந்தத் பொதுத் தேர்தல் வெற்றி பெற்றுள்ளதாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
எழுத்து அளவு:

அரசியல் வரைபடம் இதுவரை வடக்குக்கு எதிரான தெற்கின் அரசியலாகவும், தெற்குக்கு எதிரான வடக்கின் அரசியலாகவும் இருந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், இதுவரை காலமும் சந்தேகம், அவநம்பிக்கை, வெறுப்பு, கோபம் ஆகியவற்றை வளர்க்கும் அரசியலே இருந்ததாகத் தெரிவித்த ஜனாதிபதி, இவ்வருட நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி இந்த நாட்டில் பிளவு அரசியல் இனி தேவையில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய  பகுதிகளின் பொதுமக்களின் அபிலாஷைகளை ஒரே மையத்துக்கு கொண்டு செல்வதில் இந்தத் பொதுத் தேர்தல் வெற்றி பெற்றுள்ளதாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்த பொதுத் தேர்தலின் மூலம் தேசிய மக்கள் சக்திக்கு எல்லையற்ற அதிகாரம் கிடைத்துள்ளதாகவும் அதன் வரம்புகளை அறிந்து செயற்படுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

இதன்படி, அந்த வரம்பற்ற அதிகாரத்தை கையாள்வது தொடர்பில் எந்தவித சந்தேகத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்..

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...