பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த 5 தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் ஊழல் அல்லது வேறு எந்தக் குற்றச்சாட்டும் இல்லாதோருக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குழப்பகரமான நிலைக்குள் சிக்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல்!
T
The Leader Desk
நவம்பர் 18, 2024 • 3:42 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த 5 தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் ஊழல் அல்லது வேறு எந்தக் குற்றச்சாட்டும் இல்லாதோருக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- இவ்விரு இடங்கள் தவிர, டலஸ் அழகப்பெரும, ஜீ.
- எவ்வித குற்றங்களும் சாட்டப்படாத ஐந்து பேரையே நியமிக்குமாறு கட்சி முக்கியஸ்தர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கட்சி உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:
எவ்வித குற்றங்களும் சாட்டப்படாத ஐந்து பேரையே நியமிக்குமாறு கட்சி முக்கியஸ்தர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கட்சி உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் கட்சியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் ஆகியோருக்கு தேசியப் பட்டியலில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டும் என தேர்தலுக்கு முன்னர் பேசப்பட்டது.
இவ்விரு இடங்கள் தவிர, டலஸ் அழகப்பெரும, ஜீ. எல். பீரிஸ், சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே மற்றும் முன்னைய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசிய பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இது தவிர, உபுல் ஜயசூரிய, ரவி ஜயவர்தன, மஹிம மெண்டிஸ் போன்றவர்களுக்கும் தேசியப்பட்டியல் ஆசனங்களை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது.
அத்துடன், இம்முறை கொழும்பு மாவட்டத்தில் 5ஆவது இடத்தில் இருந்த எரான் விக்ரமரத்ன, நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டிய குற்றமற்றவர் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டுக் கட்சிகளும் சில தேசியப்பட்டியல் இடங்களைக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுவின் கலந்துரையாடலின் பின்னர், தேசிய பட்டியல் பதவிகளுக்கு யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

