Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

அரசியல் பக்குவம் தொடர்பில் மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கிறார் கல்முனை ரஹ்மத் மன்சூர்!

T

The Leader Desk

நவம்பர் 17, 2024 • 9:27 AM

அரசியல் பக்குவம் தொடர்பில் மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கிறார் கல்முனை ரஹ்மத் மன்சூர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நடைபெற்று முடிந்த 10 ஆவது பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னர் இன்று (17) விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
  • தற்போதைய காலகட்டத்தில் பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் மிக அவசியமானது.
  • பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்த நிலையில் தற்போதைய காலத்தில் பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் 22 பேர் இருக்க வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற மரம் இங்கேதான் முளைத்தது.
எழுத்து அளவு:

(பாறுக் ஷிஹான்)

கல்முனையில் வளர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் இன்று  தோற்கடிக்கப் பட்டிருக்கிறது அதேபோன்று இந்த கல்முனையில் சிலரை தூண்டிவிட்டு வெடிகளை போட்டு வெடிக்க வைத்த அரசியல்வாதியை  நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கிறது. 
 
அரசியல் என்றால் ஒரு பக்குவம் இருக்க வேண்டும் நாங்கள் எமது மேடைகளில் எவரையும் தாக்கி பேசியதில்லை நாம் பிறந்த மண்ணை பாதுகாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம்  காங்கிரஸ் வேட்பாளர்  ரஹ்மத் மன்சூர்   தெரிவித்தார்.
 
நடைபெற்று முடிந்த 10 ஆவது பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னர்  இன்று (17) விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
மேலும் அவர் தெரிவித்ததாவது
 
ஒவ்வொரு போராட்டமும் தனிநபருக்கானது அல்ல என   ஒவ்வொரு மேடைகளிலும் நான் கூறியுள்ளேன்.  இது கல்முனைக்கான ஒரு போராட்டம். 1994 ஆம் ஆண்டு இது போன்றதொரு போராட்டத்துக்கு முகம் கொடுத்து இருந்தபோது கல்முனை பகுதியில் முஸ்லிம் வாக்காளர்களின்  வாக்குகள் சூறையாடப்பட்டு அம்பாறையில் உள்ள சிங்கள வேட்பாளர்கள் அதிகளவில் தெரிவு செய்யப்பட்டனர். 
 
இதனை பல மேடைகளில் நான் கூறியது உண்மை இதனை யாவரும் அறிவீர்கள்.
 
அதேபோன்று தேசிய மக்கள் சக்தியைச்  சேர்ந்த  புகாரிக்கு ஆதரவு  தெரிவித்துவிட்டு இன்று தேர்தல் முடிவின் பின்னர் நான்கு சிங்கள வேட்பாளர்களை வெற்றி பெற  வைத்திருக்கிறார்கள்.
 
இவ்வாறான  செயற்பாடுகளை ஓர் அரசியல்வாதியே  முன்னெடுத்துள்ளார். எதிரி என்றால் நேராக மோத வேண்டும் ஜனநாயக ரீதியாக நடக்க வேண்டும்.  மக்களை சீரழிக்கின்ற ஒரு தீர்மானமாக எடுத்து நீங்கள் செய்த இந்த வேலை அதன் தாக்கம் மக்களுக்கே போய்ச் சேரும். 
 
கல்முனை என்பது எல்லோரையும் வாழவைத்த மண் இந்த மண்ணுக்கு துரோகம் செய்தவர்கள் யார் என்பதை மக்கள் தற்போது அறிந்திருக்கிறார்கள். இதற்குரிய பதிலை மக்கள் கொடுப்பார்கள். கொடுக்க வேண்டும் என்று நான் வினயமாக  கேட்டுக் கொள்கிறேன்.
 
தற்போதைய காலகட்டத்தில் பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் மிக அவசியமானது. பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்த நிலையில் தற்போதைய காலத்தில் பாராளுமன்றத்தில்  முஸ்லிம் பிரதிநிதிகள்  22 பேர் இருக்க வேண்டும். 
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற மரம் இங்கேதான் முளைத்தது. மர்ஹூம் எம்எச்சம் அஷ்ரபினால் இந்த மரம் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இங்கு வளர்கப்பட்டது ஆனால் இன்று கல்முனையில் தோற்கடிக்கப்பட்டு இருப்பது என்பது மிகவும் கவலையாக இருக்கின்றது.
 
இவ்வாறு கல்முனையில் வளர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் இந்து தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.
 
அதேபோன்று இந்த கல்முனையில் சிலரை தூண்டிவிட்டு வெடிகளை போட்டு வெடிக்க வைத்த அரசியல்வாதியை  நினைத்தால் மிகவும் கவலையாக உள்ளது. 
 
குரோத அரசியலில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். இவ்வாறான தீய அரசியல்வாதிகளை மக்கள் இனங்கான வேண்டும். இது தவிர முஸ்லிம் காங்கிரஸ் என்று பேரியக்கத்தை எவராலும் அழிக்க முடியாது. எமது மக்கள் அதனை  உறுதி செய்துள்ளனர் 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...