Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

லங்கா ஈ நியூஸ் இணையதளம் மீதான தடை நீக்கப்பட்டது!

T

The Leader Desk

நவம்பர் 14, 2024 • 6:48 AM

லங்கா ஈ நியூஸ்  இணையதளம் மீதான தடை நீக்கப்பட்டது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பு ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்தில் நடைபெற்ற "ஊடகத்தின் அரசியல்" நிகழ்ச்சியில் உரையாற்றிய ஊடகத்துறை அவர், இலங்கையில் லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் முடக்கப்பட்டமை தொடர்பில் தனது கருத்தையும் விளக்கினார்.
  • தடை செய்ய முயற்சிப்பது வெறும் பின்னடைவு தான்" என மங்கள சமரவீர அங்கு தெரிவித்தார்.
  • "லங்கா ஈ நியூஸ் தடை செய்யப்பட்டமை தொடர்பில் நானும் ஒரு வார்த்தை கூறுவேன்.
எழுத்து அளவு:

இணையத்தளத்துக்கான அணுகலை முடக்கும் உத்தரவை அரசாங்கம் நீக்கியுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த இணையத்தளத்தை முடக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருந்தார். 

இலண்டனில் இருந்து இயங்கும் 'லங்கா ஈ நியூஸ்' இணையத்தளம் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதி தடை செய்யப்பட்டது. இதற்குக் காரணம் 'லங்கா ஈ நியூஸ்' இணையத்தளம் வெளியிட்ட செய்தியால் ஜனாதிபது சிறிசேன கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 

இலங்கை நிபுணத்துவ ஊடகவியலாளர்கள் சங்கம், நிபுணத்துவ இணைய ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகள் பலவும் இந்தத் தடை தொடர்பில் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றன. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் இருந்த நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவும் அப்போது 'லங்கா ஈ நியூஸ்' முடக்கப்பட்டமைக்கு எதிராக பகிரங்கமாகத் தோன்றியமை அதில் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. 

PHOTO 2024 11 14 10 34 27

இன்று இணையத்தளங்களை தடைசெய்வது 21ஆம் நூற்றாண்டுக்கு பொருந்தாத அர்த்தமற்ற செயல் என மங்கள சமரவீர ஒருமுறை கூறியிருந்தார்.

கொழும்பு ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்தில் நடைபெற்ற "ஊடகத்தின் அரசியல்" நிகழ்ச்சியில் உரையாற்றிய ஊடகத்துறை அவர், இலங்கையில் லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் முடக்கப்பட்டமை தொடர்பில் தனது கருத்தையும் விளக்கினார்.

"லங்கா ஈ நியூஸ் தடை செய்யப்பட்டமை தொடர்பில் நானும் ஒரு வார்த்தை கூறுவேன். இன்று எந்த இணையத்தளத்தையும் தடை செய்ய முடியாது. தடை செய்ய முயற்சிப்பது வெறும் பின்னடைவு தான்" என மங்கள சமரவீர அங்கு தெரிவித்தார்.

2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் ராஜபக்க்ஷ ஆட்சிக் காலத்தில் அதன் ஆசிரியரான சந்ருவன் சேனாதீரவுக்கும இணையத்தளத்துக்கும் தொடர்ச்சியாக மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டது. இதனையடுத்து உயிரைப் பாதுகாப்பதற்காக அவர் வெளிநாடு சென்றதுடன் அந்த இணையத்தளத்தை வெளிநாட்டில் இருந்து தொடர்ந்து பராமரித்து வருகின்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...