Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

அழகான அறுகம்ப: முழுமையான பாதுகாப்பு தொடர்பில் அதிக கரிசனை!

T

The Leader Desk

நவம்பர் 14, 2024 • 6:20 AM

அழகான அறுகம்ப: முழுமையான பாதுகாப்பு தொடர்பில்  அதிக கரிசனை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு அமைச்சு, பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொடர்புடைய முகவர்களின் உடனடியானதும், விரிவானதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா இன்று அறுகம் வளைகுடா பகுதிக்கு விடுவித்திருந்த பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்கியுள்ளது.
  • "இலங்கை அரசாங்கத்துடனும், அதன் சட்ட அமுலாக்கத்துடனும் வலுவான பங்காளித்துவத்தை" ஐக்கிய அமெரிக்கா மதிப்பதாகத் தெரிவித்த ஐக்கிய அமெரிக்கத் தரப்பானது, இன்று பிற்பகல் விடுவிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு எச்சரிக்கையை இரத்து செய்தது.
  • குறித்த பிரதேசங்களில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சகல நபர்களும் இம்முயற்சிகளில் இலங்கை பொலிஸாருக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கினர்.
எழுத்து அளவு:
ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு அமைச்சு, பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொடர்புடைய முகவர்களின் உடனடியானதும், விரிவானதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா இன்று அறுகம் வளைகுடா பகுதிக்கு விடுவித்திருந்த பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்கியுள்ளது.
 
இலங்கை எந்தவொரு பாதுகாப்பு எச்சரிக்கையையும் உடனடியாகக் கவனத்தில் கொள்வதுடன் அதற்கமைய சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள்  எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் உட்படாத வகையில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உரிய  அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியில் ஒருங்கிணைந்த மற்றும் துரித பாதுகாப்பு நடவடிக்கைகளை செயற்படுத்தியிருந்தனர்
 
சுற்றுலாப் பயணிகளின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அறுகம்பை பகுதியில் பாதுகாப்பைப் பேணுமாறு இலங்கை பொலிஸாரால் விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. குறித்த பிரதேசங்களில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சகல நபர்களும் இம்முயற்சிகளில் இலங்கை பொலிஸாருக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கினர்.
 
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில், வெளிநாடு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், அனைத்து பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பு முகவர்களுடனும் இணைந்து, 
 
இலங்கை தரப்பின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேரடியாக சம்பந்தப்பட்ட இராஜதந்திர தூதரகங்களின் தலைவர்களுக்கு விளக்கமளித்து, விடுத்திருந்த பாதுகாப்பு எச்சரிக்கை மற்றும் அதற்கான பயண ஆலோசனைகளை நீக்குமாறு வலியுறுத்தினார். .
 
இக்கோரிக்கையானது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹேரத்தினால் நேற்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது. "இலங்கை அரசாங்கத்துடனும், அதன் சட்ட அமுலாக்கத்துடனும் வலுவான பங்காளித்துவத்தை" ஐக்கிய அமெரிக்கா மதிப்பதாகத் தெரிவித்த ஐக்கிய அமெரிக்கத் தரப்பானது, இன்று பிற்பகல் விடுவிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு எச்சரிக்கையை இரத்து செய்தது.
 
எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு இலங்கைக்கு வருகை தரவிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு அமைதியானதும், அழகானதும் மற்றும் நட்பு ரீதியானதுமான இடமாக இலங்கை விளங்குவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
 
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
 
கொழும்பு
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...