Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

வவுனியாவில் ரிஷாத் - மஸ்தான் ஆதரவாளர்கள் மோதல்: வாகனங்கள் மீது தாக்குதல், இருவர் காயம்!

T

The Leader Desk

நவம்பர் 11, 2024 • 5:56 PM

வவுனியாவில் ரிஷாத் - மஸ்தான் ஆதரவாளர்கள் மோதல்: வாகனங்கள் மீது தாக்குதல், இருவர் காயம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலையில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ரிஷாத.
  • வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் இன்று (11) இரவு 8 மணியளவில் காதர் மஸ்தானின் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது.
  • சற்று நேரத்தில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனத் தொடரணிகள் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள பிரதான வீதிக்கு வந்தன. இதனால் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்ப்பட்டு முதலாக மாறியது.
எழுத்து அளவு:

முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலையில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ரிஷாத. பதியுதீன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயணித்த வாகனங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் இன்று (11)  இரவு 8 மணியளவில் காதர் மஸ்தானின் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் பொதுக்கூட்டத்தை நோக்கிகூச்சலிட்டுச் சென்றிருந்தனர்.

சற்று நேரத்தில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனத் தொடரணிகள் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள பிரதான வீதிக்கு வந்தன. 

இதனால் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்ப்பட்டு முதலாக மாறியது.

இதன்போது  ரிஷாத் பதியுதீனின் வாகனத் தொடரணி தாக்கப்பட்டது. அவர் வாகனத்துக்குள் இருந்த நிலையில் அவரது வாகனம் சேதமாக்கப்பட்டதுடன் அவரது ஆதரவாளர்களின் வாகனங்களும் தாக்கப்பட்டது. குறித்த தாக்குதலையடுத்து அந்த வாகனத்தொடரணி அந்தப் பகுதியில் நிறுத்தாமல் வேகமாக சென்றது. 

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் நிலமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தனர். சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை இவ்சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சூடுவெந்த புலவு பகுதியில் இடம்பெற்ற மஸ்தானின் பொதுக்கூட்டத்தில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நிலமை கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் காதர் மஸ்தானின் பிரசாரக் கூட்டம் பொலிஸாரின் பாதுகாப்புடன் தொடர்ந்தது 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...