Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

கிராண்ட்பாஸில் மாடிக்குடியிருப்பின் லிப்ட் உடைந்து வீழ்ந்து பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட நால்வர் காயம்!

T

The Leader Desk

நவம்பர் 11, 2024 • 12:11 PM

கிராண்ட்பாஸில் மாடிக்குடியிருப்பின் லிப்ட் உடைந்து வீழ்ந்து பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட நால்வர் காயம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உயன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மின்தூக்கி (லிப்ட்) ஒன்று உடைந்து வீழ்ந்ததில் நால்வர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 72ஆவது வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
  • இந்த வீட்டுத் தொகுதியின் 5ஆவது மாடியில் உள்ள ஒரு குழுவினர் நேற்று (10) பிறந்தநாள் விழாவை பக்கத்து வீடுகளிலிருந்த மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கொண்டாடினர்.
  • இது தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸாரின் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த அடுக்குமாடி குடியிருப்பை சோதனையிட வந்துள்ளனர்.
எழுத்து அளவு:

உயன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மின்தூக்கி (லிப்ட்) ஒன்று உடைந்து வீழ்ந்ததில் நால்வர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 72ஆவது வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீட்டுத் தொகுதியின் 5ஆவது மாடியில் உள்ள ஒரு குழுவினர் நேற்று (10) பிறந்தநாள் விழாவை  பக்கத்து வீடுகளிலிருந்த மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கொண்டாடினர்.

இது தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸாரின் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த அடுக்குமாடி குடியிருப்பை சோதனையிட வந்துள்ளனர்.

5ஆவது மாடியில் பிறந்தநாள் விழா நடைபெற்ற வீட்டுக்கு லிப்டில் செல்லும் போது லிஃப்ட் உடைந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் இதற்கு முன்னரும் இவ்வாறான விபத்துக்களை எதிர்நோக்கிய போதிலும், இவ்வாறான விபத்துக்களை தடுப்பதற்குரிய அதிகாரிகளிடம் இருந்து எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...